YouTurn

திமுக ஆட்சியில் சாலைகளின் மோசமான நிலை என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

திமுக ஆட்சியில் சாலைகளின் மோசமான நிலை என்று பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த புகைப்படம் 2012ஆம் ஆண்டிலிருலிருந்து சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

பரவிய செய்தி

மறக்க முடியாத ஆட்சி… இதை விட வேணுமா சாட்சி 



Facebook Link 


விரிவான விளக்கம்

சாலையில் மிக மோசமான பள்ளங்கள் விழுந்திருக்கிறது. அதில் மழைநீர் தேங்கியிருக்கிறது. மேலும், ஒரு கனரக வாகனம் சாலையில் உள்ள குழியில் விழுந்து சிக்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு மிக மோசமாக இருக்கும் சாலையின் புகைப்படத்தை பதிவிட்டு, திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் சாலைகள் இந்த நிலையில் இருப்பதாக அதிமுகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 




உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் தேடுகையில் ‘CUTE PICTURES’ என்ற வலைப்பூ (Blog) பக்கத்தில் இந்த புகைப்படத்தைக் காணமுடிந்தது. அதில் இந்த புகைப்படம் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 


image.png


மேலும் தேடியதில், ’Times of India’ பத்திரிகை கடந்த 2015 ஏப்ரல் மாதம் ‘Common Uncommon Crazes of India’ என்ற தலைப்பில் 300க்கும் மேற்பட்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்ததைக் காணமுடிந்தது. அதில் பரப்பப்படும் புகைப்படத்தைக் காண்கிறோம். அதன் கீழ் எழுதப்பட்டுள்ள குறிப்பில், இந்த புகைப்படம் அலகாபாத் (பிரயாக்ராஜ்) நகரில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 



மேலும் , ’JETIR’ ஆய்விதழில் 2019 ஜீன் மாதம் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றில் இந்த புகைப்படம் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம். அதில் இந்த புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


image.png


ஆனால் அந்த புகைப்படத்தில் தெரியும் கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் எழுத்துகள் இந்தி மொழி போல் இருப்பதைக் காண்கிறோம். இதனால், இந்த புகைப்படம் கேரளா அல்லது உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரத்தில் எடுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்யமுடியவில்லை. ஆனால் இந்த புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக எந்த குறிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதிலிருந்து இந்த புகைப்படம் 2012ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் பரவி வருகிறது என்பதும் இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல என்பதும் உறுதியாகிறது.


முடிவு:


2012ஆம் ஆண்டிலிருலிருந்து இணையத்தில் பரவிவரும் பழைய புகைப்படத்தைக் கொண்டு திமுக ஆட்சியில் சாலைகளின் நிலை மோசமாக உள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது. மேலும் இந்த புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல என்பது தெரியவருகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.