YouTurn

2050-ல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா மாறும் என்று பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

2050-ல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா மாறும் என்று பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆசிய-பசிபிக் பகுதியில் முஸ்லிம் மக்கள்தொகை இந்துகளைவிட 2050ஆம் ஆண்டில் அதிகமாகும் என்று ஆய்வறிக்கை சொல்வதை திரித்து, ”அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்” என்று தவறாக பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

2050-ல் அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்... ஆய்வறிக்கையில் தகவல்.. மக்களே! உங்க கருத்து என்ன?

#India #Muslimpopulation #Year2050 #CommentsPlease #HinduMunnani


image.png


 X Link

விரிவான விளக்கம்

வரும் 2050ஆம் ஆண்டில் இந்தியா இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் நாடாக மாறும் என்று ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டதாக இந்து முன்னணியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ கணக்கில் பரப்பப்படுகிறது. 


https://x.com/i/web/status/1874411730320892177


உண்மை என்ன:


உலகளவிலும் இந்திய அளவிலும் வெவ்வேறு மதக் குழுக்களை பின்பற்றக்கூடிய மக்கள்தொகை பற்றி எழுதப்பட்ட  ஆய்வறிக்கைகளை இணையத்தில் தேடியபோது, ‘Pew Research Center’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள் காணக்கிடைத்தன. 


2022 டிசம்பர் மாதம் Pew Research Center வெளியிட்டுள்ள கணக்கீடுகளின் படி, இந்தியாவில் 2020ஆம் ஆண்டு முஸ்லிம்களின் மக்கள்தொகை 21.3 கோடியாகவும், இந்துகளின் மக்கள்தொகை 109.3 கோடியாகவும் இருந்தது. 2050ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 31 கோடியாக உயரும் என்றும் அதேபோல், இந்துகளின் மக்கள்தொகையும் 129.7 கோடியாக உயரும் என்றும் கணக்கிடப்படுகிறது. இதிலிருந்து இந்தியாவில் முஸ்லிம்களைவிட நான்கு மடங்கு அதிக இந்துகள் இருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.



இதேபோல், Pew Research Center 2015 ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2050 ஆண்டில் உலகளவில் இந்துகளின் மக்கள்தொகை 100 கோடியில் இருந்து 140 கோடியாக உயரும் என்றும், 2010ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் இந்துகள் 15 சதவீதமாக இருப்பது போலவே 2050ஆம் ஆண்டிலும் இந்த விதிகம் நிலையாகவே இருக்கும் என்றும் தெரிகிறது. அதாவது, உலக மக்கள்தொகையில் இந்துகளின் விகிதம் 2050ஆம் ஆண்டிலும் கிட்டதட்ட 15 சதவீதமாகவே நீடிக்கும். 



மேலும், இந்தியாவும் நேபாளமும் மட்டுமே இந்துகள் பெரும்பான்மையாக வாழும் நாடாக இருக்கிறது. இந்த நிலை 2050ஆம் ஆண்டிலும் அப்படியே நீடிக்கும். 


அதேபோல், ஆசிய-பசிபிக் பகுதியில் 2010ஆம் ஆண்டில் இந்துகள் அதிகமாக இருந்தாலும், 2050ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் மக்கள்தொகை இந்துகளைவிட அதிகமாகும் என்று தெரிவிக்கிறது. 


இதற்கு காரணம், இந்தியாவில் கருவுறுதல் விகிதம் (Fertility Rate) குறைந்து வருவதுதான் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) குறைந்து வருவதற்கு குழந்தை வளர்ப்பு செலவு மிகுந்ததாக இருப்பது, பெண்களும் அதிகமாக வேலைக்கு செல்வதால் குழந்தை பெற்றுக்கொள்வதில் தாமதம் அல்லது ஒரு குழந்தை மட்டும் போதுமென நினைப்பது என பன்முகப்பட்ட காரணங்கள் இருப்பதாக ’INDIA TODAY’ வெளியிட்டுள்ள கட்டுரை தெரிவிக்கிறது. 


image.png


மேலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ளதால், 2050-ல் முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகமாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.  


மேலும் படிக்க: இந்துகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி பேசினாரா ஆந்திராவின் முதல்வர்?


இவ்வாறு, ஆசிய-பசிபிக் பகுதியில் முஸ்லிம் மக்கள்தொகையை பற்றி குறிப்பிட்டுள்ளதை திரித்து இந்தியாவில் இந்துகளைவிட  முஸ்லிம்கள் அதிகமாக இருப்பார்கள் என்று தவறாக பரப்புகின்றனர்.


முடிவு:


ஆசிய-பசிபிக் பகுதியில் முஸ்லிம் மக்கள்தொகை இந்துகளைவிட 2050ஆம் ஆண்டில் அதிகமாகும் என்ற ஆய்வறிக்கை சொல்வதை திரித்து, ”அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்” என்று இந்து முன்னணி என்னும் வலதுசாரி அமைப்பு மதவாத கண்ணோட்டத்தில் திரித்து பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க