YouTurn

புத்தகத்தில் கிறிஸ்தவ அடையாளம் எனப் பரப்பப்படும் பழைய செய்தி!

புத்தகத்தில் கிறிஸ்தவ அடையாளம் எனப் பரப்பப்படும் பழைய செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

2019ல் தனியார் பள்ளி டைரியில் ’A ஃபார் ஆதாம், B ஃபார் பைபிள்’ என்கிற பக்கம் இடம்பெற்றிருந்தது. அன்றைய காலகட்டத்தில் சர்ச்சையான நிலையில் அப்பக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன.

பரவிய செய்தி

மிக்க நன்றி @polimernews  சேனலுக்கு. இப்படித்தான் பல வருடங்களுக்கு முன்பாகவே கிறிஸ்துவ மிஷ்னரிகளின் சதி செயலால் தமிழ் சினிமாக்களிலும் சரி, தமிழ் பாட புத்தகங்ளிலும் சரி இல்லாத ஒன்றை செயல் படுத்தி ஏகபட்ட இந்துக்களை மதம் மாற்றி விட்டார்கள் என்று பலர் வேதனை படுகிறார்கள். 

image.png

X link

விரிவான விளக்கம்

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ஒரு பள்ளியில் வழங்கப்பட்ட கையேட்டில் ’A for Adam’, ‘B for Bible’ எனக் கிறிஸ்துவ மதம் குறித்த குறிப்புகள் இடம்பெற்று உள்ளதாக பாலிமரில் வெளியான செய்தி ஒன்று பரப்பப்படுகிறது. பாலிமர் செய்தி வீடியோவை பதிவிட்டு, இப்படித்தான் கிறிஸ்துவ மிஷினரிகள் இந்துக்களை மதம் மாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுப் பரப்புகின்றனர். 

உண்மை என்ன?

பரவக் கூடிய சம்பவம் குறித்து தேடியதில், 2019ம் ஆண்டு முதலே ’A for Adam’, ‘B for Bible’ என ஆங்கில எழுத்துகள் கொண்டு கிறிஸ்துவ மதம் குறித்த வார்த்தைகள் கொண்ட பக்கம் சமூக வலைத்தளத்தில் வலதுசாரிகளால் பரப்பப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. 

மேற்கொண்டு இது பற்றித் தேடியதில் ’நியூஸ் 18 தமிழ்நாடு’ ஊடகத்தில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான செய்தியைக் காண முடிந்தது. 

image.png

அதுமட்டுமின்றி பாலிமர் செய்தியிலேயே, இது பற்றி அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசியதாக ஆடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. அதில், தங்கள் பள்ளியில் அரசின் பாடத் திட்டம்தான் பின்பற்றப்படுவதாகவும், இது மாணவர்களுக்கு வழங்கப்படும் school diary-ல் அச்சிட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு அப்பக்கங்கள் நீக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவற்றிலிருந்து இது 2019ம் ஆண்டு தனியார் பள்ளியில் கொடுக்கப்பட்ட டைரியில் இருந்தது என்பதும், அன்றைய காலகட்டத்திலேயே இது தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில் நீக்கப்பட்டுவிட்டதாகவும் பள்ளி சார்பில் அப்போதே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தற்போது நடந்தது போல் பழைய செய்தியை தவறாகப் பரப்புகின்றனர்.

முடிவு: 

தனியார் பள்ளி டைரியில்  ’A for Adam’, ‘B for Bible’ என அச்சிட்ட சம்பவம் 2019ம் ஆண்டு நடந்தது. இது சர்ச்சையான நிலையில் அன்றைய நாளிலேயே நீக்கப்பட்டதாகப் பள்ளி தலைமை ஆசிரியர் பேசிய ஆடியோவும் பரவக் கூடிய அதே செய்தியில் இடம்பெற்றுள்ளது. இது சமீபத்தில் நடந்தது போல் தவறாகப் பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.