யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
புதிய தலைமுறை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்ட News Card-ஐ Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டதாகும்.
பரவிய செய்தி
Artificial Intelligence சம்மந்தமாவா?

கே டி ராகவன் கிட்ட அப்படி என்ன சந்தேகம்

விரிவான விளக்கம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் 5ஆம் தேதியன்று சென்னை வந்தார். அப்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியானது. இவ்வாறான ஒரு சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுவதை சீமான் மறுத்தார்.
இந்நிலையில், ’நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை. சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்காக அதே ஹோட்டலில் தங்கியிருந்த கே.டி.ராகவனை தான் சந்தித்தேன்’ என்று சீமான் விளக்கமளித்ததாக குறிப்பிடும் ‘புதிய தலைமுறை’ செய்தி ஊடகத்தின் News Card சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
Artificial Intelligence சம்மந்தமாவா? pic.twitter.com/Z1TwuvvDvW
உண்மை என்ன?
பரப்பப்படும் News Card-ல் 06/04/25 என்ற தேதியும் 2.00 PM என்ற நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு ‘புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

‘புதிய தலைமுறை’யின் ‘எக்ஸ்’ தளத்தில் 06/04/25 என்ற தேதியும் 2.00 PM நேரமும் குறிப்பிடப்பட்ட பதிவை காணமுடிந்தது. அதில், “நிர்மலா சீதாராமனை நான் சந்திக்கல; சந்திச்சிருந்தா தைரியமா 'இதுக்காகத்தான் சந்திச்சேன்'னு சொல்லுவேன்" என்று கூறி நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக சொல்லப்படுவதை சீமான் மறுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கே.டி.ராகவனை சந்தித்தது பற்றி ஏதும் குறிப்பிடப்படுவில்லை.
மேலும், ‘புதிய தலைமுறை’யின் பேஸ்புக் தளத்தில் இதுகுறித்து 06/04/25 என்ற தேதியும் 12.00 PM நேரமும் குறிப்பிடப்பட்ட ஒரு பதிவைக் காணமுடிந்தது. அதிலும் கே.டி.ராகவனை சந்தித்தது பற்றி ஏதும் குறிப்பிடப்படுவில்லை.

இதிலிருந்து பரப்பப்படும் News Card புதிய தலைமுறை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்ட News Card-ஐ Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
’தான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை. சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்காக அதே ஹோட்டலில் தங்கியிருந்த கே.டி.ராகவனைதான் சந்தித்தேன்’ என்று சீமான் விளக்கமளித்ததாக பரப்பப்படும் News Card, Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டதாகும்.