யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘ஹத்ராஸ் மாவட்டத்தில் ’போலே பாபா’ என்ற சாமியாரால் நடத்தப்பட்ட சத்சங் என்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இறந்தவர்களின் சடலங்களைக் காட்சிபடுத்தும் வீடியோ இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இறந்தவர்களின் பிணங்கள் கொத்துக் கொத்தாக கிடத்தப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றினை பதிவிட்டு, ‘பங்களாதேஷில் மதவெறிகளால் இந்துக்கள் கொடூரமாக நடத்தப்படும் விதம்’ என்ற கருத்தின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.
உண்மை என்ன:
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடியதில், ‘Zee Madhya Pradesh Chhattisgarh’ என்ற பேஸ்புக் பக்கத்தில் ‘ஹத்ராஸில் சத்சங்கத்தின் போது ஏற்பட்ட நெரிசல்’ என்று இந்தியில் எழுதப்பட்ட தலைப்பில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

12.45 நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவின் 7.38ஆவது நிமிடத்தில் பரப்பப்படும் வீடியோவில் இருக்கும் காட்சியைப் பார்க்கிறோம். காட்சிகள் மனதை உழுக்குவதாக இருப்பதால் சிறிது ‘Blur’ செய்யப்பட்டிருக்கிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டு ’Hathras satsang Stampede’ என்ற Keywords கொண்டு தேடுகையில், ‘abp live’ செய்தித்தளம் வெளியிட்டிருந்த ஒரு செய்தியை காணமுடிந்தது.

அதன்படி, 2024 ஜீலையில் உத்தர பிரதேசம் ‘ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் ’போலே பாபா’ என்ற சாமியாரால் சத்சங் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இறந்ததாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான முக்கிய காரணம் ‘அதிக கூட்டம் வந்ததுதான்’ என்று உத்தர பிரதேச போலீஸ் அதிகாரி ராஜேஷ் சிங் கூறுகிறார். 5000 நபர்கள் பங்கேற்கும் வகையில் மட்டுமே நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 15,000 நபர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதிலிருந்து, இந்த வீடியோவில் காட்டப்படும் இறந்தர்களின் சடலங்கள் ஹத்ராஸில் ’போலே பாபா’ சாமியாரின் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் இறந்தவர்களுடையது என்பது தெளிவாகிறது. இதனை திரித்து பங்களாதேஷில் இந்துக்கள் கொடூரமாக நடத்தப்படுவதாக பொய் செய்தி பரப்புகின்றனர்.
முடிவு:
ஹத்ராஸில் சத்சங்க என்ற நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக இறந்தவர்களின் சடலங்களை காட்சிபடுத்தும் வீடியோவை பதிவிட்டு, பங்களாதேஷில் இந்துக்கள் தாக்கப்படுவதாக மத பிரிவினைக் கண்ணோட்டத்தில் திரித்துக் பரப்பப்படுகிறது.
