யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பெட்ரோல் பங்கிற்கு தன் ஆண் துணைவருடன் வந்த பெண் ஒருவர், அலைபேசியில் பேசிக்கொண்டே வேறொரு ஆணின் வண்டியில் ஏறிச் செல்வது போன்ற வீடியோவை பதிவிட்டு, ’இது ரீல்ஸ் இல்ல.. உண்மை சம்பவம்’ என்று எக்ஸ் தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’Sanjjanaa Galrani’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அப்பதிவிலே, ”இப்பக்கத்தில் முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த குறும்படங்கள் பொழுதுபோக்கு மற்றும் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன” என்ற Disclaimer கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ’Sanjjanaa Galrani’ பேஸ்புக் பக்கத்தில் தேடியதில், இது போன்ற பல scripted வீடியோக்கள் பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அவ்வீடியோவின் இறுதியில், Disclaimer கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த Disclaimer-ஐ வெட்டி (Cut) நீக்கிவிட்டு பரப்புகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

இதிலிருந்து பரப்பப்படும் வீடியோ, முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோ என்பது உறுதியாகிறது.
முடிவு:
முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவை உண்மை என நினைத்து தவறாக பரப்புகின்றனர்.
