YouTurn

தமிழ்நாட்டில் நடந்த கொடூரக் கொலை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

தமிழ்நாட்டில் நடந்த கொடூரக் கொலை என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த கொலைச் சம்பவம் கடந்த மே மாதம் ஹைதராபாத்தில் உள்ள Red Hills என்னும் பகுதியில் நடந்ததாகும்.

பரவிய செய்தி

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத M. K. Stalin ஆட்சி..! பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொ*றானுக, அருமையான மாடல் திமுக மாடல் #DmKfailsTN

image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

இரு சக்கர வாகனத்தில் வரும் ஒருவரை, அவர் வருவதற்காகவே காத்திருந்த இருவர் கொடூரமாக தாக்குகிறார்கள். தாக்கிவிட்டு, இவர்களை தப்பிக்க செய்வதற்காக அங்கே காத்திருந்த மற்றொரு நபருடன் இன்னொரு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்கிறார்கள். இந்த காட்சி CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது.


இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ’இந்த சம்பவம் தற்போது திமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டில் நடந்தது’ என்று பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Meem tv’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. அதில், அயன் குரேஷி என்ற இளைஞர் ரெட் ஹில்ஸ் என்னும் பகுதியில் உள்ள நிலோஃபர் ஹோட்டல் அருகில் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இதனை அடிப்படையாகக் கொண்டு தேடுகையில், ’Munsif News’ என்ற செய்தித்தளத்தில் இது குறித்த செய்தியைக் காணமுடிந்தது. 2025 மே மாதம் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தியில், ‘இந்த கொலைச் சம்பவம் ஹைதராபாத் அருகில் உள்ள Red Hills-ல் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொலை செய்யப்பட்டவர் அயன் குரேஷி என்பதும், இந்த அயன் குரேஷி 2020ஆம் ஆண்டில் மைனராக இருக்கும் போது ஒருவரை கொலை செய்ததாகவும் அதற்கு பழி தீர்க்கும் விதமாக அவர் இப்போது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


image.png


மேலும், ’THE HINDU’ செய்தித்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘அயன் குரேஷி மற்றும் அவரது உறுவினர்கள் குடும்பத் தகராறு காரணமாக 2020ஆம் ஆண்டு ஒரு கொலை செய்ததாகவும் அதற்கு பழி வாங்கவே இப்போது அயன் குரேஷி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கை ’நம்பல்லி’ போலீஸார் விசாரித்து வருவதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த கொலைச் சம்பவம் கடந்த மே மாதம் ஹைதராபாத் அருகில் உள்ள Red Hills என்னும் பகுதியில் நடந்தது என்பது உறுதியாகிறது.


முடிவு:


கடந்த மே மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகில் உள்ள Red Hills என்னும் பகுதியில் நடந்த கொலையை தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.