YouTurn

கழிவு நீர்த் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தை! சர்ச்சை என்ன? உண்மை என்ன?

கழிவு நீர்த் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தை! சர்ச்சை என்ன? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் வேலை செய்யும் தமிழ்செல்வி என்பவரது குழந்தையை கையில் வைத்திருந்த நிலையில், அதுதான் கழிவு நீர்த் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தை எனச் சொல்லி தவறாகப் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

"அங்க பாருங்க... குழந்தைய கையில வச்சுக்கிட்டே தேடுற மாதிரி நடிக்கிறாங்க.. செப்டிக் டேங்ல விழுந்த குழந்தைய கம்பி போட்டு எடுத்தேன்னு சொன்னாங்க.. ஆனா,....." செப்டிங் டேங்கில் விழுந்து தான் குழந்தை உயிரிழந்ததா..? பிற்பகல் 2 மணியளவில் தனியார் பள்ளியில் நடந்தது என்ன..? சிசிடிவியால் அம்பலமான நாடகம்...! #Viluppuram | #SchoolStudent | #Child | #Death | #SepticTank | #PrivateSchool | #CCTV | #SaintMarysMatriculationSchool | #PolimerNews


image.png


X Link

விரிவான விளக்கம்

கடந்த ஜனவரி 3ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள St.Mary’s மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூடப்படாத கழிவு நீர்த் தொட்டியில்  விழுந்து 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, ‘கழிவு நீர்த் தொட்டியில் குழந்தை விழுந்ததாக சொல்லிவிட்டு, பெண் ஒருவர் குழந்தையுடன் நடமாடும் காட்சி அந்த பள்ளி வாளகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாக’ ஊடகத்திலும் சமூக வலைதளத்திலும் சர்ச்சையேற்படுத்தும் வகையில் செய்தி பரவியது.





உண்மை என்ன:


பரப்பப்படும் செய்தியின் அடிப்படையிலான keywords-களைக் கொண்டு தேடியதில், ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றை காணமுடிந்தது. அதன்படி, இறந்த குழந்தை ’லியா லட்சுமி’யின் தந்தை பழனிவேல் விழுப்புரம் SP-யிடம் புகார் மனு அளித்துள்ளது தெரியவருகிறது. 



அந்த புகாரில், ‘பள்ளி வாளகத்தில் 37 CCTV கேமராக்கள் இருந்ததாகவும், அதில் 32  CCTV கேமராக்களில் பதிவான footage-கள் மட்டுமே பள்ளி நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்’ குறிப்பிடுகிறார். அதிலொரு கேமராவில் பதிவான காட்சியில், ’பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கையில் குழந்தையுடன் கழிவு நீர்த் தொட்டியை நோக்கி செல்கிறார். மீண்டும் சில நிமிடங்கள் கழித்து குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏதோவொரு குற்றத்தை மறைக்க, குழந்தை கழிவு நீர்த் தொட்டியில் விழந்து இறந்ததாக பள்ளி நிர்வாகம் நாடகமாடுவதாக புகார் கூறியிருக்கிறார்.


image.png


இது குறித்து மேலும் விரிவாக தேடியதில், ’Thanthi TV’ யூட்யூப் தளத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான செய்தி ஒன்றை காணமுடிந்தது. அதன்படி, CCTV கேமரா பதிவாகியுள்ள அந்த பெண்ணின் கையில் உள்ள குழந்தை, அந்த பள்ளியில் வேலை செய்யும் தமிழ்செல்வி என்பவரின் கைக்குழந்தை என்றும், இந்த தமிழ்செல்வியின் குழந்தையை கையில் வைத்து கொண்டிருந்த நிலையில், அது இறந்த குழந்தை லியா என்று தவறாக பரப்பப்பட்டது என்றும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


அதே பள்ளியில் வேலை செய்யும் தமிழ்செல்வி என்பவரது குழந்தையை, கழிவு நீர்த் தொட்டியில் விழுந்த குழந்தை எனச் சொல்லி தவறாகப் பரப்புகின்றனர்.


முடிவு:


ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் வேலை செய்யும் தமிழ்செல்வி என்பவரது குழந்தையை கையில் வைத்திருந்த நிலையில், அது கழிவு நீர்த் தொட்டியில் விழுந்து இறந்த குழந்தை லியா என்ற தவறாக பரப்பப்பட்டிருகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.