YouTurn

தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள காசோலையைக் கொண்டும் வங்கிகளில் பணத்தைப் பெறலாம்.

தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள காசோலையைக் கொண்டும் வங்கிகளில் பணத்தைப் பெறலாம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வாடிக்கையாளர்கள் இந்தி, ஆங்கிலம் அல்லது தங்களது பிராந்திய மொழிகளில் படிவத்தை பூர்த்தி செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

பரவிய செய்தி

அன்புள்ள மோடி ஜி, 

தமிழக அரசு ஹிந்தியை ஆதிரிக்கவில்லை. அடுத்த முறை நிதி கேட்டும் போது தமிழில் எழுதப்பட்ட காசோலையை அவர்களுக்கு வழங்கவும்.


  1. அதை ஆங்கிலத்தில் மாற்ற சொன்னால் அம்பலப்படுத்தவார்கள்.


  1. அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால், உங்கள் கோடிகள் வங்கியில் பாதுகாப்பாக இருக்கும். எந்த வங்கியும் அதை பணமாக்காது.

விரிவான விளக்கம்

தேசிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ்  2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு கூறி வருவதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அடுத்த முறை நிதி கேட்கும் போது தமிழில் எழுதப்பட்ட காசோலையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என பூர்ணிமா என்பவர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். வங்கியால் வழங்கப்படும் காசோலை படிவங்களில் தமிழ் மொழியில் எழுதினால், அந்த காசோலையைக் கொண்டு எந்த வங்கியிலும் பணத்தை பெறமுடியாது என்றும் இதனால் உங்கள் கோடிகள் வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கும் எனவும் கூறியிருந்தார். 


உண்மை என்ன?

இது குறித்து  RESERVE BANK OF INDIAவின் இணையதள பக்கத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை வழக்கப்படுவது குறித்து வரையறைக்கப்பட்ட விதிமுறைகளை  தேடி பார்த்தோம். அதில் 5.7.2 புள்ளியில் எந்த மொழியிலும் காசோலைகளை எழுதுதல் என்பது குறித்து குறிப்பிட்டுயிருந்தது. அதன்படி, காசோலை படிவங்கள்  (cheque forms) இந்தியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால், வாடிக்கையாளர்கள் இந்தி, ஆங்கிலம் அல்லது தங்களது பிராந்திய மொழிகளில் இந்த படிவத்தை பூர்த்தி செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள காசோலையைக் கொண்டும் வங்கிகளில் பணத்தைப் பெறலாம் என்பது உறுதியானது. தற்போது இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அந்த பதிவின் Screenshot மூலம் ஆய்வு செய்து உண்மையை கண்டறிந்துள்ளோம். 


முடிவு : 

வங்கியால் வழங்கப்படும் காசோலை படிவங்களில் தமிழ் மொழியில் எழுதினால், அந்த காசோலையைக் கொண்டு எந்த வங்கியிலும் பணத்தை பெறமுடியாது என்று சொல்லப்படுவது முற்றிலும் தவறான தகவலாகும். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.