YouTurn

வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் கொடூரமாக தாக்கப்படும் காட்சி எனப் பரவும் உபி வீடியோ!

வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் கொடூரமாக தாக்கப்படும் காட்சி எனப் பரவும் உபி வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சாமியார்கள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

பங்களாதேஷில் ஹிந்து சாமியார்கள் கொடூரமான முறையில் தாக்கப்படும் காட்சி... இவர்கள் மனிதர்களா?? இல்லை மிருகங்களா?? அட! காட்டுமிராண்டி கூட்டமே.! ஆனால் பாரதத்தில் எந்த கலவரம் வந்தாலும் இங்கே இருக்குற துலுக்கனுங்க இது மாதிரி உதை வாங்குவது இல்லையே ஹிந்துக்களிடம். அது ஏன்??

X Link | Archive Link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சாமியார்கள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில், காவிநிற உடையில் உள்ள சிலரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்குவதை தெளிவாகக் காணமுடிகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ‘Zee News’ யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு இது லக்னோவில் நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டு ஆகஸ்ட் 10 அன்று செய்தி வெளியிட்டிருந்ததைக் காணமுடிந்தது.


இதே போன்று ‘Free Press Journal‘ ஊடகப் பக்கத்திலும், பரவி வரும் வீடியோ காட்சிகளைக் குறிப்பிட்டு “காணொளி: லக்னோவில் திருட்டு சம்பவத்துக்குப் பிறகு சாதுக்களாகக் காட்சியளிக்கும் 4 ஆண்கள் கிராம மக்களால் செருப்பால் கொடூரமாக தாக்கப்பட்டனர்“ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர். 

அதில், “உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சாதுக்கள் போல் நடித்து மக்களின் விலையுயர்ந்த பொருட்களையும் பணத்தையும் கொள்ளையடித்த 4 இளைஞர்கள் கிராம மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். கடுமையாக தாக்கப்பட்ட பின்னர், அந்த நபர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் சாதுக்கள் வேடமிட்டு திருட்டுத்தொழிலில் ஈடுப்பட்ட நான்கு பேரை பொதுமக்கள் அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் தாக்கப்படுவதாகக் கூறி வலதுசாரிகள் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சாமியார்கள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க