யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாடு மின்சார தொடர்பு கழகத்தில் (TANTRANSCO), "எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி பணி நியமனம்" என்று குறிப்பிட்டு பரப்பப்படும் செய்தி போலியானது
பரவிய செய்தி
TANTRANSCO-ல் எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடிப் பணி நியமனம்!
நேரடி நியமனம் (எழுத்துத் தேர்வு இல்லை - நேரடி நேர்காணல் வாயிலாக); பதவிகள்: களப்பணியாளர், தொழில்துட்பவியலாளர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர்; தகுதி: 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ (ITI) அல்லது டிப்ளமோ (Diploma); சம்பளம்: * 31,500 - ₹ 46,000* + கொடுப்பனவுகள்; கடைசித் தேதி: அக்டோபர் 31, 2026-உடனடியாக விண்ணப்பிக்கவும்.
விரிவான விளக்கம்
தமிழ்நாடு மின்சார தொடர்பு கழகத்தில் (TANTRANSCO), "எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி பணி நியமனம்" என்று குறிப்பிட்டு செய்தித்தாளின் விளம்பரம் ஒன்று வாட்சாப் போன்ற சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் புகைப்படத்தில், "பதவிகள்: களப்பணியாளர், தொழில்துட்பவியலாளர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர்; தகுதி: 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி / ஐடிஐ (ITI) அல்லது டிப்ளமோ (Diploma); சம்பளம்: 31,500 - ₹ 46,000 + கொடுப்பனவுகள்; கடைசித் தேதி: அக்டோபர் 31, 2026-உடனடியாக விண்ணப்பிக்கவும்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) எக்ஸ் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாடு மின்சார தொடர்பு கழகத்தில் (TANTRANSCO), "எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி பணி நியமனம்" என்று குறிப்பிட்டு பரப்பப்படும் செய்தி போலியானது என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தனர்.
"எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்" என்று பரப்பப்படும் TANTRANSCO ஆட்சேர்ப்பு குறித்த இந்த அறிவிப்பு முற்றிலும் போலியானது மற்றும் மோசடியானது ஆகும்.
இத்தகைய எந்தவொரு விளம்பரத்தையும் TANTRANSCO வெளியிடவில்லை. தகுதியான மற்றும் உண்மையான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அனைத்தும்… pic.twitter.com/dFr7m5yFeQ
அதில், ""எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்" என்று பரப்பப்படும் TANTRANSCO ஆட்சேர்ப்பு குறித்த இந்த அறிவிப்பு முற்றிலும் போலியானது மற்றும் மோசடியானது ஆகும். இத்தகைய எந்தவொரு விளம்பரத்தையும் TANTRANSCO வெளியிடவில்லை. தகுதியான மற்றும் உண்மையான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அனைத்தும் எங்களது அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpdcl.org பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும்.
பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாறவோ அல்லது பணம் செலுத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் போலியான செய்திகளை வாட்சாப் போன்ற சமூக ஊடகப் பக்கங்களில் சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், “TANTRANSCO-ல் எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடிப் பணி நியமனம்” எனப் பரவும் செய்தி போலியானது என்பது உறுதியாகிறது.