யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆடு போன்ற தலையுடன் விசித்திரமான தோற்றம் கொண்ட புகைப்படம், ஒரு போட்டிக்காக போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படமாகும். இதே போன்று ராட்சத கால்கள் தோற்றத்தைக் கொண்ட மற்றொரு புகைப்படம், ‘டெமோடிகோசிஸ்’ என்ற அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நாயின் புகைப்படம்.
பரவிய செய்தி
திருவண்ணாமலை மாவட்டம், தண்டரம்பட்டு வட்டம், கீழ்வலசை என்ற கிராமம். இன்று மதியம் 1:00 அளவில் நடந்த சம்பவம்... திடீரென்று ஒரு வித்தியாசமான ஜீவன் ஒன்று காட்டில் திடீரென்று ஒரு பெண்ணை தாக்கிய சம்பவம்...!!
விரிவான விளக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள கீழ்வலசை என்ற கிராமத்தில் வித்தியாசமான உயிரினம் ஒன்று, காட்டில் ஒரு பெண்ணை திடீரென்று தாக்கியதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில் ஆடு போன்ற தலையுடன் விசித்திரமான தோற்றம் கொண்ட ஒரு புகைப்படமும், ராட்சத கால்கள் தோற்றத்தைக் கொண்ட மற்றொரு புகைப்படமும் இருப்பதை காண முடிகிறது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளவாறு, உண்மையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பட்டு வட்டத்தில் வித்தியாசமான உயிரினம் ஒன்று, காட்டில் ஒரு பெண்ணை திடீரென்று தாக்கியதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். ஆனால் இது குறித்த எந்த செய்திகளும் நமக்கு கிடைக்கவில்லை.
அடுத்ததாக, பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது கடந்த 2017-ல் இருந்தே “தெலங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜின்னாரம் காடுகளில் வேற்றுகிரகவாசிகள் காணப்படுகிறது” என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

எனவே இது குறித்து மேலும் தேடியதில், “Deviantart” என்ற இணையதளப் பக்கத்தில், ஆடு போன்று தோற்றம் கொண்ட முதல் புகைப்படம், கடந்த 2011-ல், “Fake Cryptid” என்ற போட்டிக்காக டிஜிட்டல் முறையில் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதே போன்று, வேற்றுகிரகவாசியின் ராட்சத கால்கள் என்பது போல் பரவும் மற்றொரு புகைப்படத்தையும் ஆய்வு செய்து பார்த்தோம். ‘டெமோடிகோசிஸ்’ என்ற அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நாயின் புகைப்படமே இது என்று, “Snopes“ இணையப்பக்கத்தில் கடந்த 2018-லேயே ஆய்வு செய்து குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்தப் புகைப்படங்களை, தற்போது பலரும் “திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள கீழ்வலசை என்ற கிராமத்தில் வித்தியாசமான உயிரினம் ஒன்று, காட்டில் ஒரு பெண்ணை திடீரென்று தாக்கியது” என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் வித்தியாசமான உயிரினம் ஒன்று, காட்டில் ஒரு பெண்ணை திடீரென்று தாக்கியது என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.