யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2018 இல் சென்னை தி.நகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது பதிவான வீடியோ இது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
எல்லை மீறும் போக்குவரத்து காவலரைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில் போக்குவரத்து காவலர்கள், இளைஞர் ஒருவரை தாக்குவதைப் பார்க்க முடிகிறது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் இந்த வீடியோ கடந்த 2018-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
எனவே இது குறித்து மேலும் தேடினோம். புதியதலைமுறை ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் கடந்த 2018 ஏப்ரல் 03 பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் “சென்னை தி.நகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் தாய், சகோதரியுடன் வந்த இளைஞருக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது பதிவான வீடியோ இது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் வீடியோவில் அந்த இளைஞர் காவலர்களின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதால், அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியின் மூலம் அறிய முடிந்தது.
இதன் மூலம் பழைய வீடியோவை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், எல்லை மீறும் போக்குவரத்து காவலர்கள் என்று பரவும் செய்திகள் தவறானது என்பதையும், இளைஞர் ஒருவர் காவலர்களை தாக்குவதின் மூலம், இது இளைஞருக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது பதிவான வீடியோ என்பதும் உறுதியாகிறது.