YouTurn

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் சமீபத்தில் சந்தித்ததாகப் பரவும் பழைய வீடியோ!

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் சமீபத்தில் சந்தித்ததாகப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் இருவரும் சந்தித்ததாகப் பரவும் 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய வீடியோ!

பரவிய செய்தி

நிதிஷ் - லாலு பிரசா‌த் சந்திப்பு!


கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக சந்திப்பு!


பீகாரில் ஆட்சி கலைப்பு?


கவிழ்கிறதா ஒன்றிய அரசு?


image.png

X link

விரிவான விளக்கம்

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது காரிலிருந்து இறங்கியபின் அவரைப் பின்தொடர்ந்து சில ஊடகவியலாளர்கள் அவரைப் படம்பிடித்து வருவதை கவனிக்க முடிகிறது . அவர் ஒரு வீட்டிற்குச் செல்கிறார், அங்கு வாசலில் ஒரு பெண், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனுடம் உள்ளே செல்கின்றனர். இருவரும் கைகுலுக்கிய பிறகு உரையாடுவது போன்ற 1:58 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.




பீகாரில் ஆட்சி கலைப்பு?

கவிழ்கிறதா ஒன்றிய அரசு? pic.twitter.com/Ijynf1y19K

— வேலூர் சரவணன்🖤❤️ (@SaraVellore) September 6, 2024


உண்மை என்ன ?


பரவி வரும் வீடியோ குறித்து “Google Reverse Image Search”  மூலம் ஆய்வு செய்ததில், இது தற்போது எடுகப்பட்ட வீடியோ அல்ல என்பதையும் இது 2022ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில்  வைரலாகி வருவதை அறியமுடிகிறது.


பரவக்கூடிய இதே வீடியோவின் முழுபகுதி OTV என்ற யூடியூப் பக்கத்தில் “பீகார் முதல்வர் நிதீஷ் குமார், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை பாட்னாவில் சந்தித்தார்”  என்ற தலைப்பிட்டு 2022ஆம் ஆண்டு,செப்டம்பர் 5 அன்று பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. 



இதனைப் பயன்படுத்தி கூடுதலாக தேடியதில், 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் 5 அன்று The Print இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிட்டிருப்பதை கவனித்தோம்.


image.png


அதில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னா வீட்டில் சந்தித்தபோது, ​​முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ஆகியோர் உடனிருந்தனர்.


2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்க்க எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியே இந்த சந்திப்பு என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. இவற்றிலிருந்து 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு இருந்தே இந்த வீடியோ வைரலாகி இருப்பதை அறியமுடிகிறது.  


முடிவு :


பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் சமீபத்தில் சந்தித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது. பரவி வரும் அவர்களது சந்திப்பு குறித்த வீடியோ 2022ஆம் ஆண்டிலிருந்தே வைரலாகி வந்துள்ளது. எனவே இது 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்டது என்று தெளிவாகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க