யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இரண்டாம் வகுப்பு - முதல் மற்றும் மூன்றாம் பருவ தமிழ் பாடப்புத்தகங்களில், ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்த பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
பரவிய செய்தி
"தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்து எதுவுமே இல்லை" - 'Shree Tv' ஊடகப் பிரிவினர்
விரிவான விளக்கம்
தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்து எதுவுமே இல்லை என்று கூறி “Shree TV” ஊடகப் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோ ஒன்றை சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்து தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆய்வு செய்தோம்.
இரண்டாம் வகுப்பு - முதல் பருவ தமிழ் பாடப்புத்தகத்தில், பக்கம் எண் 49-ல் ஆத்திச்சூடி குறித்து கதை வடிவில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

இதே போன்று, இரண்டாம் வகுப்பு - முதல் பருவ தமிழ் பாடப்புத்தகத்தில், பக்கம் எண் 37-ல் கொன்றைவேந்தன் குறித்து பத்து பாடல்களும், அதற்கான எளிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளதைத் தெளிவாகக் காண முடிகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்து எதுவுமே இல்லை என்று கூறி “Shree TV” சமூக ஊடகப் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் தவறான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்து எதுவுமே இல்லை என்று பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.