யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதல்ல.
பரவிய செய்தி
இந்தியாவின் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் ஆப்கானிஸ்தான்.
இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றி வைத்து நமது தேசிய கீதமான ஜன கண மன
பாடம் ஆப்கானிய மக்கள்.
உண்மையான நண்பனுக்கு என்றும் தோள் கொடுப்போம்.

விரிவான விளக்கம்
ஆப்கானிஸ்தானில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்ததாகக் கூறி 29-வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலகப் பரப்பி வருகிறது.
இந்தியாவின் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் ஆப்கானிஸ்தான்.
இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றி வைத்து நமது தேசிய கீதமான ஜன கண மன
பாடம் ஆப்கானிய மக்கள்.
உண்மையான நண்பனுக்கு என்றும் தோள் கொடுப்போம். pic.twitter.com/DDM4x58Z9H
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப்பார்த்ததில் இது ஆப்கானிஸ்தானில் நடந்தது அல்ல என்பதை அறியமுடிந்தது.
ஜனவரி 27, 2026 அன்று, “The tricolor was hoisted at Darul Uloom Deoband on Republic Day; a video of the national anthem went viral, leading Muslims in the lead“, என்ற தலைப்பில் இதே வீடியோ குறித்து Navbharattimes என்ற இணையதளப்பக்கதில் செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதை கவனித்தோம்.

அதில், உத்திர பிரதேச மாநிலம், Saharanpur (சஹாரன்பூர்) மாவட்டத்தில் உள்ள தியோபந்த் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனமான Darul Uloom Deoband வளாகத்தில் 2026ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து தேடியதில், Theobserverpost என்ற Instagram பக்கத்தில், குடியரசு தினத்தன்று தாருல் உலூம் தேவ்பந்த் கல்வி நிலையத்தில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து, பரவி வரும் வீடியோ ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியானது.
முடிவு:
நம் தேடலின் வழியாக சமூக வலைதளங்களில் வைரலகப் பரவி வரும் தகவல் தவறானது. இது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும், உத்திர பிரதேசத்தில் Darul Uloom Deoband கல்வி வளாகத்தில் குடியரசு தினத்தன்று எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெளிவாகத் தெரிகிறது.