YouTurn

பல்லடம் அங்காளம்மன் கோவிலில் மொட்டை அடிக்க 1,000 ரூபாய் வசூலிப்பு எனப் பரவும் போலி செய்தி!

பல்லடம் அங்காளம்மன் கோவிலில் மொட்டை அடிக்க 1,000 ரூபாய் வசூலிப்பு எனப் பரவும் போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பல்லடம் அங்காளம்மன் கோவில் ரசீது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

மொட்டை அடிக்க 1000 ரூபாய் வசூலிப்பு

X Link | Archive Link

விரிவான விளக்கம்

பல்லடம் அங்காளம்மன் கோவிலில் மொட்டை அடிக்க 1,000 ரூபாய் கட்டணம் வசூலிப்பு என்று கூறி, ரசீது ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பாஜகவினர்பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது. 


உண்மை என்ன?


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இவை தவறான செய்தி என்பதை அறிய முடிந்தது. 


பரவி வரும் ரசீதின் புகைப்படத்தில் “தினமலர்” என்று வாட்டர்மார்க் குறிப்பிடப்பட்டிருந்ததால், இது குறித்து தினமலர் ஊடகத்தின் சமூக ஊடகங்களில் ஆய்வு செய்து பார்த்தோம்.


‘மொட்டைக்கு ஆயிரம் ரூபாயா?’ என்று குறிப்பிட்டு, நேற்று (ஜூலை 12) நியூஸ் கார்டு ஒன்றை பதிவிட்டிருந்தது. அதில், “மொட்டை அடிக்க 1,000 ரூபாய் வசூலிப்பு! பல்லடம் அங்காளம்மன் கோவிலில் மொட்டை அடிக்க 1,000 ரூபாய் கட்டணம் வசூலித்த ரசீது வெளியான நிலையில், அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமசாமி, ‘அது போலி ரசீது. போலீசில் புகார் அளிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்” என்றும் குரிப்பிடப்பட்டிருந்தது. 


இதன் மூலம் தினமலர் வெளியிட்டிருந்த போலி செய்தி என்று குறிப்பிட்டு வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை, எடிட் செய்து சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்புவதை அறிய முடிந்தது. 


மேலும் படிக்க: மொழி தெரியாமல் கஷ்டப்படுவதைத் தடுக்க ஹிந்தி போன்ற பல மொழிகளைக் கற்க வேண்டும் என நடராஜன் கூறியதாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!


மேலும் படிக்க: கள்ளச்சாராய சாவை முன்பே கணித்து பதவி விலகிய எஸ்.பி என தினமலர் வெளியிட்ட செய்தி உண்மையா?


இதற்கு இதே போன்று பரவிய பல போலி செய்திகள் குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம். 

மேலும் படிக்க: ’வாசுகி பாம்பு’ - புராண கதாப்பாத்திரத்தை உண்மையாக்க முயற்சி செய்யும் தினமலர்!

முடிவு:


நம் தேடலில், பல்லடம் அங்காளம்மன் கோவிலில் மொட்டை அடிக்க 1,000 ரூபாய் வசூலிப்பு என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது என்பதை அறிய முடிகிறது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க