YouTurn

சூரியஒளியில் காயவைக்கப்பட்ட உப்பில் வைட்டமின் D அதிகம் உள்ளதா? பரவும் வதந்தி!

சூரியஒளியில் காயவைக்கப்பட்ட  உப்பில் வைட்டமின் D அதிகம் உள்ளதா? பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சூரியஒளியில் மூன்று நாட்கள் காயவைக்கப்பட்ட உப்பில், வைட்டமின் D அதிகமாக இருக்கும் என்று பரவும் செய்திகள் தவறானவை. சூரியஒளியில் நேரடியாக வைட்டமின் D இருக்காது.

பரவிய செய்தி

சூரியன் படும்படி கல் உப்பை மூன்று நாட்கள் காயவைத்து பயன்படுத்துவதன் மூலம், சூரியனில் இருந்து நேரடியாக வரும் வைட்டமின் D- ஐ உப்பு உறிஞ்சிக்கொள்ளும். எனவே வைட்டமின் D குறைபாடு உள்ளவர்கள் இந்த உப்பை பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர் ஒருவர் எனக்கு பரிந்துரை செய்துள்ளார். நான் அவ்வாறு தான் உப்பை காய வைத்து பயன்படுத்துகிறேன். எனக்கு ‘வைட்டமின் D’ குறைபாடு சரியாகிவிட்டது. - நடிகை ரம்யா பாண்டியன். 



Instagram Link | Archive Link

விரிவான விளக்கம்

நடிகை ரம்யா பாண்டியன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “சூரியன் படும்படி கல் உப்பை மூன்று நாட்கள் காயவைத்து பயன்படுத்துவதன் மூலம், சூரியனில் இருந்து நேரடியாக வரும் வைட்டமின் D- ஐ உப்பு உறிஞ்சிக்கொள்ளும். எனவே வைட்டமின் D குறைபாடு உள்ளவர்கள் இந்த உப்பை பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவர் ஒருவர் எனக்கு பரிந்துரை செய்துள்ளார். நான் அவ்வாறு தான் உப்பை காய வைத்து பயன்படுத்துகிறேன். எனக்கு ‘வைட்டமின் D’ குறைபாடு சரியாகிவிட்டது” என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பலரும் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hey it's Ramya YouTube (@ramyapandian.yt)


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், “சூரியன் படும்படி கல் உப்பை மூன்று நாட்கள் காயவைத்து பயன்படுத்துவதன் மூலம், வைட்டமின் D குறைபாடு சரியாகும்” எனப் பரவும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை அறிய முடிந்தது. 


வைட்டமின் D என்பது எலும்புகள் மற்றும் பிற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான ஒரு இன்றியமையாத ஊட்டச்சத்து மற்றும் ஹார்மோன் ஆகும். மேலும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட, இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை ஒழுங்குபடுத்த,  இருதய ஆரோக்கியம் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் வைட்டமின் D முக்கிய பங்காற்றுகிறது. வைட்டமின் D, பொதுவாக “கால்சிஃபெரால்” என்றும் அழைக்கப்படுகிறது. 


இது வைட்டமின் D2 (எர்கோகால்சிஃபெரால்) மற்றும் வைட்டமின் D3 (கோலெகால்சிஃபெரால்) என்ற இரண்டு வடிவங்களாக உள்ளது. இவற்றில் வைட்டமின் D3 கிடைக்க சூரியனின் புறஊதா (UV) கதிர்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 



பொதுவாக ‘வைட்டமின் D3’ சூரியனில் இருந்து உடலுக்கு நேரடியாக கிடைப்பதில்லை. சூரியனில் இருந்து கிடைக்கும் புற ஊதா (UV) கதிர்கள் நமது தோலில் படும்போது, தோலில் இருக்கும் 7-டீஹைட்ரோகொலெஸ்டிரால் (7-dehydrocholesterol) கொழுப்பு ,  ‘வைட்டமின் D3’ ஆக மாற்றப்படும். பின்னர் இவை கல்லீரலுக்கு கொண்டு செல்லப்பட்டு 25-ஹைட்ராக்ஸிவைட்டமின் D3 ஆக மாற்றப்படுகிறது. இறுதியில் சிறுநீரகங்களில், இவை கால்சிட்ரியால் ஆக மாற்றப்படுகிறது. 



மேலும் வைட்டமின் டி3, கொழுப்பு நிறைந்த மீன், முட்டையின் மஞ்சள் கரு போன்ற சில உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலமும் கிடைக்கிறது.  


எனவே, சூரியஒளியில் மூன்று நாட்கள் காயவைக்கப்பட்ட உப்பில், வைட்டமின் D அதிகமாக இருக்கும் என்று பரவும் செய்திகள் தவறானவை. மனிதர்களுக்கு சூரியஒளியின் மூலம் வைட்டமின் D கிடைக்க, தோல், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் பங்கு மிக அவசியம். சூரியஒளியில் நேரடியாக வைட்டமின் D  இருக்காது.


முடிவு: 


நம் தேடலில், சூரியஒளியில் காயவைக்கப்பட்ட உப்பில் வைட்டமின் D அதிகம் உள்ளதாக பரவும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பது உறுதியாகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க