YouTurn

வயதான இந்து ஒருவரை தூக்கிலிடும் இஸ்லாமியர்கள் எனப் பொய் செய்தி பரப்பும் வலதுசாரிகள்!

வயதான இந்து ஒருவரை தூக்கிலிடும் இஸ்லாமியர்கள் எனப் பொய் செய்தி பரப்பும் வலதுசாரிகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோவில் இருப்பவர் போரஹத்தி யூனியன் தலைவரும், ஜெனாய்தா சதர் அப்ஜிலா அவாமி லீக்கின் பொதுச் செயலாளருமான ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரோன். இவர் ஒரு இஸ்லாமியர்.

பரவிய செய்தி

வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள் பாருங்கள்! அவர்கள் ஜாதியை கேட்கவில்லை..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 04) ஆளும்கட்சியான அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு இன்னும் பதற்றநிலை நிலவி வருகிறது. 

இந்நிலையில் வங்கதேசத்தில் வயதான இந்து ஒருவரை தூக்கிலிடும் இஸ்லாமியர்கள் எனக்கூறி 47 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

X Link:

X Link

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ‘Banana Media 0000’ யூடியூப் பக்கத்தில் ஜெனாய்தா மாவட்ட ஹரினாகுந்த் அவாமி லீக் கட்சி தலைவர் ஹிரான் கொல்லபட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டார்” என்று குறிப்பிட்டு ஆகஸ்ட் 06 அன்று வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில் பரவி வரும் வீடியோவின் காட்சிகள் பொருந்துவதைத் தெளிவாகக் காணமுடிந்தது. 


எனவே இது
குறித்து மேலும் தேடியதில் “ஜெனைடாவில், அவாமி லீக் தலைவர் ஹிரோனின் உடல் ஆத்திரமடைந்த கூட்டத்தால் தூக்கிலிடப்பட்டது” என்று குறிப்பிட்டு ஆகஸ்ட் 06 அன்று ‘Mzamin’ ஊடகப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

அதில், “ஜெனாய்தா சதர் அப்ஜிலா அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரும், உள்ளூர் போரஹத்தி யூனியன் தலைவருமான ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரான் (75) கொல்லப்பட்டார். திங்கள்கிழமை மாலை ஜெனைடா நகரில் உள்ள அவரது வீட்டை ஆத்திரமடைந்த கும்பல் தாக்கி தீ வைத்ததில் அவர் வீட்டிலேயே எரித்துக் கொல்லப்பட்டார். ஆத்திரமடைந்த மக்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து உடலை பியாரா சத்தருக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரது உடல் எரிந்த நிலையில் தூக்கில் தொங்கிவிடப்பட்டது” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். 

இதே போன்று ‘Deshrupantor’ ஊடகப்பக்கத்தில் இறந்தவரின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், “ஜெனாய்தா சதர் அப்ஜிலா அவாமி லீக்கின் பொதுச்செயலாளர் ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரான் மற்றும் அவரது ஓட்டுநர் அக்தர் ஹொசைன் ஆகியோர் மர்ம நபர்களால் எரிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட பிறகு, அவரின் உடல் நகரின் மையப்பகுதியில் உள்ள பியாரா சத்தரில் தூக்கிலிடப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம், பரவி வரும் வீடியோவில் இருப்பவர் போரஹத்தி யூனியன் தலைவரும், ஜெனாய்தா சதர் அப்ஜிலா அவாமி லீக்கின் பொதுச் செயலாளருமான ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரோன். இஸ்லாமியரான இவரது வீட்டைத் தாக்கிய போராட்டக்காரார்கள், வீட்டிற்கு தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் இறந்த ஹிரோனின் உடலை போராட்டக்காரர்கள் கைப்பற்றி தூக்கில் தொங்க வைத்தபோது எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது வயதான இந்து முதியவரை கொன்ற இஸ்லாமியர்கள் என்று கூறி தவறாகப் பரவி வருகிறது என்பதை அறியமுடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், வங்கதேசத்தில் வயதான இந்து ஒருவரை தூக்கிலிடும் இஸ்லாமியர்கள் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க