யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேச வெள்ளத்தில் சிக்கிய முஸ்லிம்களுக்கு இஸ்கான் பக்தர்கள் உணவுகளை வழங்கினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
ஒரு வாரத்திற்கு முன்பு, சில பங்களாதேஷ் வஹாபிஸ்டுகள் இஸ்கான் கோயிலைத் தாக்கி தெய்வங்கள் உட்பட அனைத்தையும் சேதப்படுத்தினர். ஆனால், இந்த வாரம் வங்கதேச வெள்ளத்தில் சிக்கிய அவர்களுக்கு இஸ்கான் பக்தர்கள் உணவுகளை வழங்கி வருகிறார்கள்.
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். முக்கியமாக ஃபெனி, மௌல்விபஜார், ஹபிகஞ்ச், கொமிலா மற்றும் சிட்டகாங் போன்ற மாவட்டங்கள் அங்கு அதிகளவில் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், வங்கதேச வெள்ளத்தில் சிக்கிய முஸ்லிம்களுக்கு இஸ்கான் பக்தர்கள் உணவுகளை வழங்கினர் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
Thousands of Muslims have taken shelter in different temples including ISKCON Temple.
— Lakshay Mehta (@lakshaymehta31) August 24, 2024
ISKCON devotees helping Bangladesh flood victims and providing food to thousands of Muslims
A few days back, these radicals were burning these Hindu temples. pic.twitter.com/ga52m1wZSP
Yes this is the same ISKCON which these people attacked and burned a few days back.#BangladeshFlood #BangladeshiHindus pic.twitter.com/erRMIFIASO
— SUKALYAN SASMAL (@Sukalyan_MB) August 23, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை “Google Reverse Image Search” மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், “Jago Hindu Parishad - JHP” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 20 அன்றே பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதே போன்று, “Iskcon Youth Forum, Sylhet” என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் பரவி வரும் இதே வீடியோ “அது உணவல்ல, கோடிக்கணக்கான ரூபாய் பொக்கிஷம்!! சிறிது உணவுக்காக மக்கள் எவ்வளவு நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள் என்று பாருங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இஸ்கான் சில்ஹட்டின் நடவடிக்கைகளில் நீங்களும் முன்வாருங்கள்” என்று குறிப்பிட்டு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் 2022 ஜூனில் வங்கதேசத்தில் ஏதாவது வெள்ளம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தேடியதில், சில்ஹட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து “The Daily Star” ஊடகப் பக்கத்தில் கடந்த 2022 ஜூன் 20 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
எனவே பரவி வரும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், வங்கதேச வெள்ளத்தில் சிக்கிய முஸ்லிம்களுக்கு இஸ்கான் பக்தர்கள் உணவுகளை வழங்கினர் என்று கூறி பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதை அறியமுடிகிறது.
