யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பங்களாதேஷில் ஜமாத் இ இஸ்லாமி தீவிரவாத அமைப்பினர் அரசு அலுவலகங்களில் உள்ள இந்து அதிகாரிகளை ராஜினாமா செய்ய வைக்கும் காட்சி எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
பங்களாதேஷில் ஜமாத் இ இஸ்லாமி தீவிரவாத அமைப்பினர் அரசு அலுவலகங்களில் புகுந்து இந்து அதிகாரிகளிடம் ராஜினாமா கடிதம் பெற்று விரட்டி விடுகின்றனர்..
விரிவான விளக்கம்
வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், அங்கு இன்னும் அசாதாரண சூழ்நிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில் பங்களாதேஷில் ஜமாத் இ இஸ்லாமி தீவிரவாத அமைப்பினர் அரசு அலுவலகங்களில் உள்ள இந்து அதிகாரிகளை ராஜினாமா செய்ய வைக்கும் காட்சி எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Worst has started .
— Vikram Pratap Singh (@VIKRAMPRATAPSIN) August 12, 2024
Bangladesh
In Bangladesh, the terrorists of Jamaat-e-Islami & BNP are now forcing Hindu government officials to write resignation letters and throwing them out of government service. Besides, they are still massacring Hindus and kidnapping and raping… pic.twitter.com/zIk3umbuhe
pic.twitter.com/i3OomCzfrt
— Abdul Kitabi عبد (@KitabiAbdul) August 12, 2024
Worst has started .
Bangladesh
In Bangladesh, the terrorists of Jamaat-e-Islami & BNP are now forcing Hindu government officials to write resignation letters and throwing them out of government service. Besides, they are still massacring Hindus and…
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், ‘Jagonews24’ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு “கபி நஸ்ருல் கல்லூரி முதல்வர் அமீனா பேகம் ராஜினாமா செய்தார்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதில், “கபி நஸ்ருல் அரசுக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் அமீனா பேகம், மாணவர்களின் முன்னிலையில் ராஜினாமா செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 11 மணி முதல் மாணவர்கள் அவர் பதவி விலகக்கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது, மாணவர்களின் கோரிக்கையை முன்வைத்து முதல்வர் அமீனா பேகம், கையெழுத்து மற்றும் முத்திரையுடன் வெள்ளைத்தாளில் ‘நான் ராஜினாமா செய்தேன்’ என எழுதி கொடுத்து ராஜினாமா செய்தார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று, ‘Kalbela’ ஊடகப் பக்கத்திலும் “கபி நஸ்ருல் அரசு கல்லூரி முதல்வர் அமீனா பேகம் ராஜினாமா செய்தார்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
‘Kalbela’ பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியின் மூலம், கபி நஸ்ருல் அரசு கல்லூரியில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டது மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தது தொடர்பாக எந்த விசாரணையும் செய்யாத கபி நஸ்ருல் அரசு கல்லூரி முதல்வரான அமீனா பேகத்தை எதிர்த்து மாணவர்கள் ராஜினாமா செய்ய கோரிக்கை வைத்ததை அடுத்து, கல்லூரி முதல்வர் அமீனா பேகம் மாணவர்கள் முன்னிலையில் ராஜினா செய்துள்ளார் என்பதை அறியமுடிந்தது.

இதன்மூலம் கபி நஸ்ருல் அரசு கல்லூரி முதல்வர் அமீனா பேகம் மாணவர்கள் முன்னிலையில் ராஜினா செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், பங்களாதேஷில் ஜமாத்-இ-இஸ்லாமி தீவிரவாத அமைப்பினர் அரசு அலுவலகங்களில் உள்ள இந்து அதிகாரிகளை ராஜினாமா செய்ய வைக்கும் காட்சி எனக் கூறிப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
