YouTurn

நடிகர் அஜித் குமாரை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் மோடி எனப் பரவும் போலியான புகைப்படம்!

நடிகர் அஜித் குமாரை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் மோடி எனப் பரவும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நடிகர் அஜித் குமாரை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.

பரவிய செய்தி

நடிகர் அஜித்தை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் நரேந்திர மோடி


X Link | Archive Link

விரிவான விளக்கம்

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 28 அன்று நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார்.


இந்நிலையில், நடிகர் அஜித் குமாரை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.


#PadmaBhushanAjithKumar#Thala 😍 விஷ்வ குருவுடன் தல 🇮🇳💥💥 pic.twitter.com/6o2deZ7kE6

— பேட்டை பிரவின் (@PETTAIPRAVEENP) April 28, 2025


உண்மை என்ன?


பரவி வரும் புகைப்படத்தில் நடிகர் அஜித் குமாரின் புகைப்படம் சரியாக பொருத்தாமல் இருந்ததால், அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்தோம். தேடியதில், “Money Control” என்ற இணையதளப் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. 


அதில், பிரதமர் நரேந்திர மோடியுடன் உலக செஸ் சாம்பியனான குகேஷ் மற்றும் அவரது பெற்றோர் இருப்பதைக் காண முடிந்தது. மேலும் அதில், “சதுரங்க சாம்பியனும் இந்தியாவின் பெருமையுமான டி.குகேஷுடன் புதுதில்லியில் ஒரு சிறந்த உரையாடலைக் கொண்டிருந்தேன் என்று பிரதமர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோரைச் சந்தித்த பின்பு கூறினார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதே போன்று, “CNBC-TV18” யூடியூப் பக்கத்திலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக செஸ் சாம்பியனான குகேஷ் ஆகியோரின் சந்திப்பு குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தன. இதில் உள்ள காட்சிகள் பரவி வரும் புகைப்படத்துடன் கச்சிதமாக பொருந்தின.



இதன் மூலம் உண்மையான புகைப்படத்தில், பிரதமர் மோடி, உலக செஸ் சாம்பியனான குகேஷ் மற்றும் அவரது பெற்றோருடனேயே இருப்பதை உறுதி செய்ய முடிகிறது. இதை எடிட் செய்து, நடிகர் அஜித் குமாருடன் பிரதமர் மோடி இருப்பது போல சமூக ஊடகங்களில் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 



முடிவு: 


நம் தேடலில், நடிகர் அஜித் குமாரை நேரில் அழைத்து கௌரவித்த பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.