YouTurn

ஆல் பாஸால் 47 ஆண்டுகளாக தேர்வு எழுதிய முதியவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சியா ?

ஆல் பாஸால் 47 ஆண்டுகளாக தேர்வு எழுதிய முதியவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சியா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தெலங்கானா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து கிரேட் அடிப்டையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார். இந்த அறிவிப்பால் 47 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வந்த 82 வயதான முகமது பரக்கத் அலி...

பரவிய செய்தி

ஐயாவோட பெயர் முகமது பரக்கத் அலி. தெலுங்கானா மாநிலம், வயது 82. 47 ஆண்டுகளாக தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு தேர்ச்சி பெற்றிருக்கிறார். வாழ்க கொரோனா



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தெலங்கானா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து கிரேட் அடிப்டையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் 47 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வந்த 82 வயதான முகமது பரக்கத் அலி என்ற முதியவர் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதியவர் தேர்வு எழுதும் புகைப்படம் ஒன்று  வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?



வைரலாகும் பதிவில் இடம்பெற்ற முதியவரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் 81 வயது முதியவர் சிவ் சரண் 46வது முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வியை சந்தித்ததாக அதே புகைப்படத்துடன் இந்தியா டுடே செய்தி கிடைத்தது. அதேபோல், 2016-ல் 42வது முறையாக எழுதிய தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.



ராஜஸ்தான் மாநிலத்தின் ஆழ்வார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ் சரண் யாதவ் என்ற முதியவர் 1969-ம் ஆண்டில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி வருகிறார். தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்ற லட்சியத்துடன் இருந்தவர்.

2016-ல் தேர்வில் தோல்வி அடைந்த போதே அவருக்கு பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனை இருப்பதாக தெரிவித்து இருந்தார். எனினும், அடுத்தமுறை விடாமுயற்சியை மேற்கொள்வேன் எனக் கூறியதாக செய்திகளில் வெளியாகியது. ஆனால், 2016-க்கு பிறகு முதியவர் சிவ் சரண் யாதவ் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதியதாக எந்த தகவலும் இல்லை.

முடிவு : 

நம்முடைய தேடலில், 2016-ம் ஆண்டு வரை ராஜஸ்தானில் பத்தாம் வகுப்பு தேர்வை 42 முறை எதிர்கொண்டு தேர்ச்சி பெறாத முதியவரின் புகைப்படம் மற்றும் விவரங்களை தெலங்கானா பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் தொடர்புப்படுத்தி தவறாக பரப்பி உள்ளனர்.

புகைப்படத்தில் இருக்கும் முதியவரின் பெயர் முகமது பரக்கத் அலி அல்ல, சிவ் சரண் யாதவ் ஆவார். அவர் கோவிலில் வசித்து வந்ததோடு, அரசின் ஊக்கத்தொகையை பெற்று வந்தவர். 2016-க்கு பிறகு அவர் தொடர்பான எந்த தகவலும் இடம்பெறவில்லை. நையாண்டிக்காக தவறான தகவல்களை பகிர வேண்டாம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க