யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர்!!! உண்மையும், வாய்மையும் வெல்லட்டும்.
Twitter Link | Archive Link

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
சமீபத்தில் "அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர். உண்மையும், வாய்மையும் வெல்லட்டும்." என்று கூறி 24 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அந்த வீடியோவில், மக்கள் கூட்டமாக 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்று சத்தமாகப் பாடிக்கொண்டும், வீதிகளில் நடனமாடிக் கொண்டும் செல்வதையும் காண முடிகிறது.
Archive Link:
Archive Link
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை உறுதி செய்ய முடிந்தது.
மேலும் அந்த வீடியோவை ஆய்வு செய்ததில், ஊர்வலத்தின் இறுதியாக தேர் வருவதையும், தெருக்களில் பிரிட்டன் தேசியக்கொடிப் பறப்பதையும் பார்க்க முடிந்தது.

naik78 என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த 2022 செப்டம்பர் 08 அன்று இதே போன்ற வீடியோ ஒன்று "லண்டன் ரதயாத்திரை 2022" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. அதிலும் மக்கள் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்றும், 'ஜெய் பிரபுபாதா' என்றும் பாடிக்கொண்டே செல்வதைக் காண முடிந்தது. இதில் பிரபுபாதா என்பது இஸ்கான் கோவிலை நிறுவியவரின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பரவி வரும் வீடியோவில் உள்ளவாறே ஒரே மாதிரியான கட்டிடம் இந்த வீடியோவின் 9:02 நிமிடத்திலும் வருவதை காண முடிந்தது. அந்த உயர்ந்த கட்டிடத்தில் பிரிட்டன் தேசியக்கொடி இருப்பது மற்றும் கட்டிடத்தின் பக்கத்தில் தேர் நிற்பது போன்ற காட்சிகள் இரண்டு வீடியோவிலும் அப்படியே ஒத்துப் போகின.

இதன் மூலம் இரண்டு வீடியோவும் ஒன்று தான் என்பதையும், பரவி வரும் வீடியோ 2022-இல் நடைபெற்ற லண்டன் ரதயாத்திரையில் எடுக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் படிக்க: இந்தியா கேட்டில் இஸ்லாமியர், கிறிஸ்தவர் பெயர்கள் இடம்பெறவில்லை எனப் பரப்பப்படும் தவறான தகவல் !
மேலும் படிக்க: கேரள அரசு கோவில்களில் முஸ்லீம், கிறிஸ்தவ பாதிரியார்களை நியமித்ததாகப் பரப்பப்படும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு இந்து மதத்தில் சேர்ந்ததாகப் பரவும் தகவல்கள் தவறானவை என்பதையும், இந்த வீடியோ 2022-இல் நடைபெற்ற லண்டன் ரதயாத்திரையில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

7 lakh Christians in America left Christianity and joined Hinduism and created a world record !!!
Let truth and orthodoxy prevail.
அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர் !!
உண்மையும், வாய்மையும் வெல்லட்டும். pic.twitter.com/5HM5uNQrHd
— Balamurugan V (@Balamur17074949) October 20, 2023
Archive Link:
7 #lakh_Christians in America left Christianity and #joined_Hinduism and created a World Record !!!#Let_truth_and_Orthodoxy_prevail.
அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர் !!!#உண்மையும்_வாய்மையும்_வெல்லட்டும். pic.twitter.com/auNmNkYDuJ
— R.S.MURALIDHARAN MD, SHATHRIYAN. (@RsmdStanley) October 21, 2023