யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2.8 கிலோ கிராம் கொண்ட இச்சிலைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் ஷிவ் நாரயண் என்ற நகைக்கடையில் செய்யப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
7800 கிலோ தூய தங்கம், 780,000 வைரங்கள் மற்றும் 780 காரட்களால் வைரத்தால் செய்யப்பட்ட சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை. இதன் இன்றய மதிப்பு பல ஆயிரம் லட்சம் கோடிகள் எனவும் இதனை விலை மதிப்பீடு செய்ய முடியலை என ஸதபதிகள் மற்றும் வல்லுனர்கள் சொன்னார்கள்

விரிவான விளக்கம்
தங்களின் மதம் மிகப் பழமையானது என்பதை பல்வேறு மதத்தினரும் நிறுவ முற்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் 7800 கிலோ கிராம் தூய தங்கத்தினால் செய்யப்பட்ட அனந்த பத்மநாபசுவாமி சிலை என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
7800 கிலோ தூய தங்கம், 780,000 வைரங்கள் மற்றும் 780 காரட்களால் வைரத்தால் செய்யப்பட்ட சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை. இதன் இன்றய மதிப்பு பல ஆயிரம் லட்சம் கோடிகள் எனவும் இதனை விலை மதிப்பீடு செய்ய முடியலை என ஸதபதிகள் மற்றும் நவீன வல்லுனர்கள்… pic.twitter.com/XNK9vAnpQV
மேலும் அச்சிலை 7,80,000 வைரங்களைக் கொண்டு செய்ததாகவும் இதன் இன்றைய மதிப்பு பல லட்சம் கோடி என்றும் பரப்பப்படுகிறது.
7800 கிலோ தூய தங்கம்,
780,000 வைரங்கள் மற்றும்
780 காரட்களால் வைரத்தால் செய்யப்பட்ட சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை. இதன் இன்றய மதிப்பு பல ஆயிரம் லட்சம் கோடிகள் எனவும் இதனை விலை மதிப்பீடு செய்ய முடியலை *
தமிழ் இனம் வணங்கத்தான்
கோவிந்தா🙏🙏 pic.twitter.com/sui6MrHlQr
உண்மை என்ன?
3000 ஆண்டுகள் பழமையானது எனப் பரவக் கூடிய இச்சிலையின் வீடியோ 2023, ஆகஸ்ட் மாதம் ‘Shiv Narayan Jewellers‘ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபர் சிலையை மாதிரியாகக் கொண்டு தங்கத்தால் ஆன இந்த சிலையை ஷிவ் நாரயண் நகைக்கடை செய்ததாக அப்பதிவில் உள்ளது.
மேலும், 2800 கிராம் (2.8 கிலோ) தங்கத்தால் செய்யப்பட்ட இந்த சிலையில் 500 காரட் உள்ள 75,000 வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 8 இன்ச் உயரம் 18 இன்ச் நீலம் கொண்ட இச்சிலையை 32 தொழிலாளர்கள் சுமார் 2 மாத காலம் நாள் ஒன்றுக்கு 16 மணிநேரம் உழைப்பைச் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சிலைத் தொடர்பாக ‘Business Standard’ ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஷிவ் நாராயண் நகைக்கடையின் நிர்வாக இயக்குனர் துஷார் அகர்வால் அளித்த பேட்டி ‘Money Control’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட தகவலை துஷார் அகர்வால் கூறுவதைக் காண முடிகிறது.
ஷிவ் நாராயண் நகைக்கடை தங்கம் மற்றும் வைரத்தினால் ஆன கடவுள்களாகக் கருதப்படும் சிலை மற்றும் ஆபரணங்களைச் செய்வதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ளது. அப்படிதான் அனந்த பத்மநாபர் சிலையும் செய்துள்ளது. ஆனால், இதனை 3000 ஆண்டுகள் பழமையான சிலை என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது.
இவற்றிலிருந்து, 7800 கிலோ கிராமில் செய்யப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான பத்மநாபர் சிலை எனப் பரவக்கூடிய தகவல் தவறானது என்பதை அறியச் செய்ய முடிகிறது. கடந்த ஆண்டுதான் இச்சிலைச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: துர்கா ஸ்டாலின் வெள்ளி அலமாரி வாங்கியதாகப் பொய் செய்தி வெளியிட்ட ஜெ நியூஸ்!
முடிவு:
7800 கிலோ தூய தங்கத்தால் செய்யப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாப சிலை எனப் பரவக் கூடிய தகவல் தவறானது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் செய்யப்பட்டுள்ளது.