யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
62 வயதான இந்து பண்டிட் ஒருவர் தனது சொந்த மகளைத் திருமணம் செய்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த முதியவர் இந்துக் கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளைத் திருமணம் செய்ததாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook link
அப்புகைப்படத்தை “இந்து மதத்தை முழுமையாக உள்வாங்கி வாழும் உண்மையான இந்து பண்டிட்” எனக் குறிப்பிட்டு பேஸ்புக் பக்கத்தில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவக்கூடிய புகைப்படத்தில் 'Troll' என்ற டிவிட்டர் கணக்கு இருப்பதைக் காண முடிகிறது. அந்த டிவிட்டர் பக்கத்தில் பரவக்கூடிய புகைப்படம் குறித்துத் தேடியதில், கடந்த டிசம்பர் 25ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவுக்குக் கீழே முதியவர் இளம்பெண்ணைத் திருமணம் செய்ததாக வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது.
https://twitter.com/TrollHoon/status/1607076248324276226
Archive link
அந்த வீடியோவை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து தேடிய போது, இந்த வீடியோ Techparesh என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 17ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. சுமார் 60 ஆயிரம் பேர் அந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர். இதே வீடியோவினை Paresh Sathaliya என்ற யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.

Instagram link
மேலும், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதேபோன்ற பல வீடியோக்களை காண முடிகிறது. சில நாட்களுக்கு முன்னர் வயதான பெண் ஒருவர் இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அதன் உண்மைத் தன்மை குறித்து 'யூடர்ன் ஆங்கிலத்தில்' செய்தி வெளியிட்டது. அவ்வீடியோவும் Techparesh இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.

English article link
தற்போது பரப்பக்கூடிய வீடியோவில் இருக்கும் பெண் வேறொரு வீடியோவில் இருப்பதைக் காண முடிகிறது. அதில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்வதாகப் பதிவிடப்பட்டுள்ளது.

Instagram link
இவற்றை வைத்துப் பார்க்கையில் அப்பக்கத்தில் உள்ள வீடியோக்கள் வைரல் செய்வதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்படும் ஸ்கிரிப்ட் வீடியோக்கள் என அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், 62 வயது பண்டிட் இந்து கடவுள் பிரம்மாவைப் பின்பற்றி தனது மகளைத் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது வைரல் செய்யப்படுவதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.