YouTurn

600 கோடி வாக்காளர்கள் பிஜேபி-க்கு வாக்களித்ததாகக் கூறிய பிரதமர் மோடி.

600 கோடி வாக்காளர்கள் பிஜேபி-க்கு வாக்களித்ததாகக் கூறிய பிரதமர் மோடி.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

டாவோஸில் நடைபெற்று வரும் 48-வது உலக பொருளாதார மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உலக பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகின் பருவநிலை மாற்றம், தீவிரவாதம் மற்றும்...

பரவிய செய்தி

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 600 கோடி வாக்காளர்கள் தமக்கு வாக்களித்தார்கள் என்றுக் கூறிய பிரதமர் மோடி.

விரிவான விளக்கம்

டாவோஸில் நடைபெற்று வரும் 48-வது உலக பொருளாதார மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



உலக பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகின் பருவநிலை மாற்றம், தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு கொள்கை பற்றி விரிவாக பேசினார். அதில், நல்ல தீவிரவாதம் மற்றும் தீய பயங்கரவாதம் என்று ஏதும் இல்லை. தீவிரவாதம் என்பதே ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வாக்காளர்கள்: 



இந்தியாவில் உள்ள 600 கோடி வாக்காளர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்து மத்தியில் ஆளும் தங்களது கட்சிக்கு பெரும்பான்மையை வழங்கியதாக் கூறினார். அதாவது இந்தியாவில் 6 பில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பதாக தவறாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் முறையாக இந்திய பிரதமர் தேவ கௌடா 1997-ம் ஆண்டில் டாவோஸில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றார் என்றும் கூறியிருந்தார்.



இந்திய தேர்தல் ஆணையத்தின் கணக்கெடுப்பின் படி, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் 814.5 மில்லியன்(81.45 கோடி) வாக்காளர்கள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் மக்கள் தொகை 134  கோடி மட்டுமே.

இந்திய வாக்காளர்கள் குறித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்திலும் 6 பில்லியன் வாக்காளர்கள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இத்தவறான கருத்து அதிகம் பரவுவதற்குள், சிலமணி நேரத்தில் அப்பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

சுருக்கமாக

உலக பொருளாதார மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வாக்களர்களின் எண்ணிக்கையை 600 கோடி என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க