YouTurn

52 வயது பெண்ணை 21 வயது இளைஞர் காதலித்து திருமணம் செய்ததாக ஊடகங்களில் வெளியான போலி வீடியோ !

52 வயது பெண்ணை 21 வயது இளைஞர் காதலித்து திருமணம் செய்ததாக ஊடகங்களில் வெளியான போலி வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உண்மை காதலுக்கு வயதில்லை... 52 வயது பெண்மணியை மணந்த 21 வயது இளைஞன்!

 Archive link

விரிவான விளக்கம்

52 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 21 வயது இளைஞன், காதலுக்கு வயதில்லை எனக் கூறியதாக கழுத்தில் மாலையுடன் வயதான பெண்ணும், இளைஞனும் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ ஒன்று ஜீ தமிழ், தமிழ் 360 நியூஸ் உள்ளிட்ட செய்தி இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.



Archive link

Archive link 

செய்தியில், " இணையதளத்தில் வைரலான வீடியோவில் கழுத்தில் மாலை அணிந்து இருக்கும் இளைஞரிடம் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா என ஒருவர் கேட்கிறார். அதற்கு, அந்த இளைஞன் ஆம் எனப் பதில் அளிக்கிறார். வீடியோவை எடுக்கும் நபர் அவர்களிடம் வயதை கேட்கையில், அவருக்கு 21 வயது என்றும், திருமணம் செய்த பெண்ணுக்கு 52 வயது என்றும் கூறியுள்ளார். இது சரியா எனக் கேட்கையில், " காதலுக்கு வயதில்லை. வயது பார்த்து காதல் வருவதில்லை " எனக் கூறியதாக " 22 நொடிகள் கொண்ட வீடியோ உடன் இடம்பெற்று இருக்கிறது.



உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், டிசம்பர் 3ம் தேதி டெக்பிரகாஷ் எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 3ம் தேதி இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.



Instagram link 

ஆனால், அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 13ம் தேதி வெளியான மற்றொரு வீடியோவில் அதே பெண் வேறொரு இளைஞருடன் கழுத்தில் மாலையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த பதிவில், இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive link 

செப்டம்பர் 14ம் தேதி டெக்பிரகாஷ் எனும் முகநூல் பக்கத்தில், வைரல் வீடியோவில் இடம்பெற்ற அதே இளைஞன் வேறொரு பள்ளி மாணவியுடன் கழுத்தில் மாலையுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளனர்.



Facebook link 

இணையத்தில் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக 52 வயதான பெண்ணை 21 இளைஞன் திருமணம் செய்வது போன்று போலியான சித்தரித்து எடுக்கப்பட்ட வீடியோக்களையும், திருமணம் செய்வது போன்ற பல்வேறு வீடியோக்களையும் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.



முடிவு : 

நம் தேடலில், உண்மை காதலுக்கு வயதில்லை, 52 வயது பெண்மணியை மணந்த 21 வயது இளைஞன் என வெளியாகும் செய்தியும், வீடியோவும் உண்மையானது அல்ல. அது போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க