YouTurn

காவலர்கள் பேசிகொள்ளும் ஆடியோ இப்போது வெளியானதா!

காவலர்கள் பேசிகொள்ளும் ஆடியோ இப்போது வெளியானதா!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரப்பப்படும் ஆடியோ 2020ஆம் ஆண்டு ஜீலை மாதம் செய்தியாக வெளியிடப்பட்டது என்பதும் இது 5 ஆண்டுகள் பழமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

கிண்டி EOW இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலமைனா?? பொதுமக்களை பற்றி கொஞ்சம் யோசிச்சி பாருங்க!


image.png


X Link / Archive Link 

விரிவான விளக்கம்

காவலர் ஒருவர் மற்றொரு சீருடையணியாத காவலரிடம் காரணம் ஏதுமில்லாமல் கடுமையாக பேசியதாக இன்னொரு காவல் ஆய்வாளரிடம் புகார் சொல்லியிருக்கிறார். அந்த காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட காவலரிடம் இவ்வாறு மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது தவறான விஷயம் என்று சொல்கிறார். அவர்கள் இவ்வாறு பேசிக்கொள்ளும் ஆடியோவை பதிவிட்டு, ”காவல் ஆய்வாளருக்கே இந்த நிலை என்றால் பொது மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்” என்று  பாஜக ஆதரவாளரான சரவணபிரசாத் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்கள்.



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த ஆடியோ வீடியோ format-ல் பதிவிடப்பட்டிருக்கிறது. அதன் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’THE ROOSTER NEWS’ என்ற யூடியூப் செய்தித்தளத்தில் இதனைக் காணமுடிந்தது.


image.png


அதில் இந்த ஆடியோ குறித்த செய்தி ”உயர் அதிகாரியிடம் பேசி மாட்டிக்கொண்ட காவலர்” என்ற தலைப்பில் 2020ஆம் ஆண்டு ஜீலை மாதம் வெளியிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அப்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதிலிருந்து, பரப்பப்படும் ஆடியோ பற்றிய இந்த செய்தி வீடியோ 5 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவருகிறது. 


முடிவு:


5 ஆண்டுகள் பழமையான ஆடியோ பற்றிய செய்தியை தற்போது நடந்ததாக  பாஜக ஆதரவாளரான சரவணபிரசாத் தவறாக பரப்பி வருகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.