YouTurn

பழைய 5,10 & 100ரூ நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததா ?

பழைய 5,10 & 100ரூ நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு. ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். பணமதிப்பிழப்புக்கு பிறகு 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா நிற ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு பலமுறை மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வதந்திகள் வைரலாகி இருக்கின்றன.

இந்நிலையில், பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்ததாக முன்னணி நாளிதழ் செய்திகளிலும் வெளியாகி வருகிறது. ஆனால், மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க உள்ளதாக பரவும் தகவல் உண்மை அல்ல என்று ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.



Twitter link | Archive link 

ஜனவரி 25-ம் தேதி ரிசர்வ் வங்கி, " வருங்காலத்தில் பழைய ₹ 100, ₹ 10 & ₹ 5 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக சில ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தவறானவை என தெளிவுப்படுத்தப்படுகிறது " என தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

மேலும் படிக்க : மார்ச் 1 முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா ?| இந்தியன் வங்கி அறிவிப்பால் குழப்பம்.

இதற்கு முன்பாக, பலமுறை புதிய 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், 50, 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப் போவதாகவும் வதந்திகள் தொடர்ந்து பரவி வந்தன.

மேலும் படிக்க : பழைய 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா ?
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க