YouTurn

45 வயது மிக்க நபர் வலிப்பின் காரணமாக உயிரிழந்ததாக பரவும் பழைய புகைப்படம்!

45 வயது மிக்க நபர் வலிப்பின் காரணமாக உயிரிழந்ததாக பரவும் பழைய புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய புகைப்படம்

சரிபார்க்கப்பட்ட கூற்று

“45 வயது மிக்க நபர் காலையில் அவினாசி சாலையில் வலிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்” என்று குறிப்பிட்டு பரவி வரும் இந்தப் புகைப்படம், கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில் பழைய செய்தியை தற்போது நடைபெற்ற சம்பவம் போன்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

#நல்லமனசு இருந்த உடனே #ஷேர் #பன்னுங்க தயவுசெய்து மிக மிக அவசரம் 

தோழர்களே நண்பர்களே 45 வயது மிக்க இவர் காலையில் #அவினாசி சாலையில் #வலிப்பின் காரணமாக #உயிரிழந்துள்ளார். இவரது உடலை #கோவை அரசு #மருத்துவமனையில்  வைத்துள்ளனர். இவரிடத்தில் எந்த ஒரு #ஆவணமும் இல்லாத காரணத்தால் இவர் யாரென்று அறிய முடியவில்லை அதனால் இவரது #புகைப்படத்தை அனைத்து #group களிலும் ஷேர் செய்யவும்..

இவரை பற்றி #தகவல்கள் கிடைக்க #உதவுங்கள்..

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

கோவை அவினாசி சாலையில் 45 வயது மிக்க நபர் காலையில் வலிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. உயிரிழந்தவரிடம் எந்த ஆவணமும் இல்லாத காரணத்தால், அவர் யாரென்று அறிய முடியவில்லை எனவும், இவரது புகைப்படத்தை ஷேர் செய்யவும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மை என்ன? 

பரவி வரும் இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது அனாமிகா இயல்பினி என்ற முகநூல் பக்கத்தில் இதே பதிவு கடந்த  ஜூன் 29, 2019 முதலே பரவி வருவதை பார்க்கமுடிந்தது. 

image.png

Facebook Link


இது குறித்து மேலும் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்பதை தேடி பார்த்தோம். ஆனால் இந்த புகைப்படம் தொடர்ப்பான உறுதியான தகவல் ஏதுவும் கிடைக்கவில்லை. 


எனவே இது 2019ஆம் ஆண்டில் இருந்தே பரவி வரும் செய்தி என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. 


முடிவு: 

நம் தேடலில், “45 வயது மிக்க நபர் காலையில் அவினாசி சாலையில் வலிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்” என்று குறிப்பிட்டு பரவி வரும் இந்தப் புகைப்படம், கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இந்நிலையில் பழைய செய்தியை தற்போது நடைபெற்ற சம்பவம் போன்று தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க