YouTurn

திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகாவிற்கு சென்ற விஷ்ணு சிலையா ?

திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகாவிற்கு சென்ற விஷ்ணு சிலையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


திருவண்ணாமலையிலிருந்து எடுத்து செல்லப்பட்ட மஹாவிஷ்ணு சிலை இன்று சனிக்கிழமை கர்நாடகாவில் இனிதே பிரதிஷ்டை செய்யப்பட்டது.இனி உலகம் காெடிய பிணியிலிருந்து மீழ பாேகிறது. ஓம் நமாே நாராயணாய நமக.




Facebook link | archive link 

விரிவான விளக்கம்

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்ரீகோதண்டராம சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்காக ஒரே கல்லில் 64 அடி உயரம் கொண்ட ஸ்ரீவிஸ்வரூப கோதண்டராம சாமி சிலையை செய்ய முடிவெடுத்தனர். இதற்கான கல் தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியில் இருப்பதை அறிந்து பாறையை வெட்டி எடுக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது.



கடந்த 2016-ம் ஆண்டு சாமி சிலை செய்யும் பணிகள் துவங்கப்பட்டன. பின்னர் 300 டன் சாமி சிலையை லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டன. 2018-ல் ஏற்பாடு செய்யப்பட்டாலும் 2019-ல் பெங்களூர் செல்ல பல இடையூறுகளை சந்தித்தது. எனினும், 2019-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி சாமி சிலை பெங்களூருக்கு சென்றடைந்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



தற்போது அந்த சிலையானது கோவிலில் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக ஓர் சிலையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுவ வருகிறது. ஆனால், அது தவறான புகைப்படமாகும். சிலை நிறுவப்பட்டது தொடர்பாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க