யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2008-ஆம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவரவாதிகள் மும்பை நகரில் ஊடுருவி பிரபல தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்த்திய தாக்குதலில் 166 பேர் இறந்தனர், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு...
பரவிய செய்தி
2008-ல் மும்பை தீவிரவாத தாக்குதலின் போது பாதுகாப்பு பணியில் திறமையாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு 2022-ல் கத்தாரில் நடைபெற உள்ள உலக கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பு வழங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விரிவான விளக்கம்
2008-ஆம் ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவரவாதிகள் மும்பை நகரில் ஊடுருவி பிரபல தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்த்திய தாக்குதலில் 166 பேர் இறந்தனர், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் இருந்து மக்களை தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாத்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளை சுட்டு கொன்றனர். இதில், அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதியை மகாராஷ்டிராவைச் சேர்ந்த காவலர் ஒருவர் உயிரோடு பிடித்தார்.
இத்தகைய பாதுகாப்பு பணியில் செயல்பட்டு மக்களை காப்பாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்கள், ஐபிஎல் போட்டிகளுக்கு உயர்ரக பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளும், 2022-ல் கத்தாரில் நடைபெற உள்ள FIFA உலக கால்பந்து போட்டியின் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.
மார்ச் மாதத்தில் கத்தார் நாட்டின் தலைநகர் டோஹாவில் நடைபெற உள்ள முதல் பாதுகாப்பு கருத்தரங்கில், இந்திய நாடெங்கிலும் உள்ள 20 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்குபெறுவர் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முதல் கருத்தரங்கு பாதுகாப்பு பணியின் புலனாய்வுத் தொடர்பானது.

“ டோஹா மற்றும் FIFA போட்டிகள் தொடர்பாக வந்த தகவல்களின் அடிப்படையில் நாடெங்கிலும் உள்ள திறமைமிக்க அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நமது அதிகாரிகளின் திறமைகள் வெளிக்கொணரப்படும், இதன் மூலம் கிடைக்கும் அனுபவமானது எதிர்காலத்தில் நம் அதிகாரிகளுக்கு பெரிதும் உறுதுணையாக அமையும் ” என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பரிந்துரைக்கப்படும் பட்டியலில், மும்பை தாக்குதலில் திறமையாக செயல்பட்ட தேசிய பாதுகாப்பு படையினர் (NSG) , மகாராஷ்டிராவின் எஸ்.பி மற்றும் டி.ஐ.ஜி போன்ற உயர் அதிகாரிகள், இந்தியாவில் நடைபெற்ற UNDER 17 FIFA உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற அதிகாரிகள், ஐ.பி.எல் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் (கால்பந்து) போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள்(IB) ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும்.
மேலும், பரிந்துரையாளர்கள் ஆங்கிலத்தில் திறமைமிக்கவர்களாகவும், ஊழல் வழக்குகள் அற்ற நேர்மையான அதிகாரிகளாக இருப்பர் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

சுருக்கமாக
இந்திய புலனாய்வு அதிகாரிகளை, 2022-ல் நடைபெற உள்ள FIFA உலக கால்பந்து போட்டியின் பாதுகாப்பு தொடர்பாக கத்தார் நாட்டின் தலைநகர் டோஹாவில் நடைபெற உள்ள கருத்தரங்கில்(செமினார்) பங்கேற்க அழைத்துள்ளனர்.