YouTurn

2021 கும்பமேளாவிற்கு ஹரித்வாரில் கூடிய பக்தர்களின் கூட்டமா ?

2021 கும்பமேளாவிற்கு ஹரித்வாரில் கூடிய பக்தர்களின் கூட்டமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹரிதுவார் கும்பமேளா ..



Facebook link

விரிவான விளக்கம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகரித்து வருகையில் நாடு முழுவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்து கொண்ட கூட்டம் என இவ்விரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ?

முதல் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 ஜனவரி 22-ம் தேதி " Kumbh Mela: Lost and found at the world's biggest gathering " எனும் தலைப்பில் வெளியான பிபிசி கட்டுரையில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.



இரண்டாவது புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 ஜனவரி 16-ம் தேதி " Seers, Naga sadhus of various akharas proceed in royal splendour for Kumbh’s first shahi snan " எனும் தலைப்பில் வெளியான ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.


கும்பமேளா எனத் தேடினால் இப்புகைப்படங்கள் முதன்மையாக கிடைப்பதால் இவ்விரு புகைப்படங்களும் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. ஹரித்வார் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறித்து செய்திகள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.






முடிவு : 

நம் தேடலில், 2021 ஹரித்வார் கும்பமேளாவில் கூடிய கூட்டம் எனப் பரப்பப்படும் இவ்விரு புகைப்படங்களுமே 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க