யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
போதை உச்சத்தில் எறிவிட்டது. தமிழகத்தில் வீரன் செய்யும் வேலை போல… திமுக அரசை திஸ்மிஸ் செய்ய வேண்டும் மக்கள் விரோத திமுக

விரிவான விளக்கம்
போதையில் ஒருவர் சாலையில் செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்றை பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். மேலும் அப்பதிவில், மக்கள் விரோத திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், இதே வீடியோ 2020, நவம்பர் 19ம் தேதி ‘First News TN | Real News 360’ என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. திமுக தலைமையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்றது 2021, மே மாதம். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் உள்ளது.
மேலும் வீடியோ குறித்து அந்த யூடியூப் பக்கத்தில், ‘குடிகார இளைஞரின் ரகளை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என அதில் குறிப்பிடப்படவில்லை.
வீடியோவில் போதையில் இருப்பதாகக் கூறப்படும் நபர் நிறுத்தும் பேருந்தின் வழித்தட எண் ‘18A’ என்றும் ’பிராட்வே’ என்றும் இருப்பதைக் காண முடிகிறது. இந்த பேருந்து எண்ணைக் கொண்டு தேடியதில், இது தாம்பரம் தெற்கு பேருந்து நிலையத்திலிருந்து பிராட்வே செல்லக் கூடிய பேருந்து என்பதை அறிய முடிந்தது.

மேலும் அந்த வீடியோவில் ‘MUFE’ என்கிற கடை பெயரையும் ‘PPAR’ என மற்றொரு கடையின் பாதி பெயரையும் காண முடிகிறது. இதனைக் கொண்டு Google Street view மூலம் தேடியதில், இந்த வீடியோ குரோம்பேட்டை பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடிந்தது.

Google Street view மூலம் பார்க்கையில் அந்த கடைகள் ‘MUFE Musicals’ மற்றும் ‘ANJAPPAR’ உணவகம் என்பதை அறிய முடிந்தது. பரவக் கூடிய வீடியோவில் உள்ள சிவப்பு நிற கட்டிடத்தையும் Street view-ல் காண முடிகிறது. குரோம்பேட்டை பகுதியில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவைத்தான் தற்போது திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது போல் தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு :
திமுக ஆட்சியில் மது போதையில் ஒருவர் பேருந்தை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. இந்த வீடியோ 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்தே சமூக வலைத்தளங்களில் உள்ளது.
போதை உச்சத்தில் எறிவிட்டது தமிழகத்தில்
வீரன் செய்யும் வேலை போல...
திமுக அரசை திஸ்மிஸ் செய்ய வேண்டும்
மக்கள் விரோத திமுக#Right_Politics pic.twitter.com/CeolPFFrma
— K.Ashok adv (@ashok777_kalam) April 28, 2024