YouTurn

சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தும் AIIMS மருத்துவர்கள் எனத் தவறாகப் பரவும் பழைய புகைப்படம் !

சீதாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தும் AIIMS மருத்துவர்கள் எனத் தவறாகப் பரவும் பழைய புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மருத்துவ ஆராய்ச்சிக்காக உடல் தானம் செய்யப்பட்ட CPI(M) தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு AIIMS மருத்துவர்கள் மரியாதை எனப் பரவும் சீன மருத்துவரின் 2016ஆண்டின் பழைய புகைப்படம்.

பரவிய செய்தி

The picture of the day!

AIIMS

Com @SitaramYechury 

The final respect

AIIMS மருத்துவ மனையில், தன்னுடைய உடல் பாகங்கள் மற்றும் உடலையும் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கிய தோழர் சீதாராம் யெச்சூரிக்கு தங்கள் இறுதி வணக்கத்தை தெரிவிக்கும் மருத்துவர்கள், மற்றும் ஊழியர்கள்.


image.png


X Link

விரிவான விளக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி  ஆகஸ்ட் 19ஆம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இந்நிலையில், AIIMS மருத்துவமனையில், உடல் பாகங்கள் மற்றும் உடலையும் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கிய தோழர் சீதாராம் யெச்சூரிக்கு தங்கள் இறுதி வணக்கத்தை தெரிவிக்கும் மருத்துவர்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகப்பக்கங்களில் பரவி வருகின்றது.



உண்மை என்ன ?


பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில் அது சீதாராம் யெச்சூரி அவர்களின் உடல் தானத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை அறியமுடிந்தது.


உண்மையில் சீதாராம் யெச்சூரி அவர்களின் உடல்தானம்  செய்யப்பட்டதா? எனத் தேடியதில், ‘மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக அவரது உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர்’ என்று தெரியவந்தது. 


இதனைத்தொடர்ந்து, பரவி வரும் புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற கோணத்தில் நாம் ஆய்வு செய்ததில்,CGTN என்ற இணையதளப்பக்கத்தில் செப்டம்பர் 30, 2016ஆம் ஆண்டு பரவி வரும் புகைப்படத்தை  குறிப்பிட்டு ‘’சீன மருத்துவர் திபெத்தில் தன்னார்வத் தொண்டு செய்யும்போது உயிரிழந்தார்; அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டன’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருப்பதை கவனித்தோம். 


image.png


அதில், கிழக்கு சீனாவின் அன்ஹுய் (Anhui) மாகாணத்தின் தலைநகரான Hefei  (ஹெஃபி) நகரில் உள்ள மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஜாவோ ஜூ திபெத் (Zhao Ju Tibet ) மூளை அனீரிசிம் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது விருப்பத்தின்படி அவர் குடும்பத்தினர் அவரது சிறுநீரகங்கள், கல்லிரல் , கருவிழிகள் போற உடல் உறுப்புகளை தானம் செய்தாகக் குறிப்பிட்டிருந்தது. இந்த செய்தியினை அவர்களது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.


மேலும், SixthTone என்ற இணையப்பக்கத்தில் “The Long March to Changing Chinese Minds About Organ Donation” என்ற தலைப்பில் பரவி வரும் புகைப்படத்தை வைத்து கட்டுரை ஒன்று பதிவிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. 



அப்படத்தின் கீழே செப். 29, 2016, எனக் குறிப்பிட்டு அன்ஹுய் மாகாணத்தில் உள்ள ஹெஃபியில் உள்ள மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உறுப்பு தானம் செய்பவருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்” என்ற விளக்கத்துடன் இடம்பெற்றிருந்தது.


இவற்றிலிருந்து, பரவிவரும் புகைப்படம் CPIM கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீதாராம் யெச்சூரியின் உடல் அல்ல என்பதையும், இந்த புகைப்படம் எய்ம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்ப்பட்டதல்ல என்பதையும் புரிந்துக்கொள்ள முடிகிறது. 


முடிவு :

சிபிஐஎம் தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடல் தானத்துக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் மரியாதை செலுத்துவதாகப் பரவும் புகைப்படம் தவறானது. உண்மையில் இது சீனாவில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர் ஜாவோ ஜூ திபெத் உடல் உறுப்புகளை தானம் செய்ததற்கு மருத்துவர்கள் மரியாதை செலுத்தும் பழைய படம் என்பதை அறியமுடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க