YouTurn

2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி.

2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் சென்ற வருடம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டனர் . புதிய 2000 நோட்டுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் . சிறுவணிகத்தில் 2000 நோட்டுகளுக்கு சில்லறை எங்கும் இல்லாத நிலை ஏற்பட்டது . அதன்பின் புதிய 500...

பரவிய செய்தி

ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி உள்ளது , மேலும் புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அடுத்த மாதம் வெளியிட உள்ளது .

விரிவான விளக்கம்

 இந்தியாவில் சென்ற வருடம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டனர் . புதிய 2000  நோட்டுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் . சிறுவணிகத்தில் 2000 நோட்டுகளுக்கு சில்லறை எங்கும் இல்லாத நிலை ஏற்பட்டது .


அதன்பின் புதிய 500 நோட்டுகளை வெளியிட்டாலும் , சில்லறை தட்டுப்பாடு அணைத்து இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றது . இதனால் புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட தீர்மானித்தனர் .எனவே 2000 நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திக்கொண்டு புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வருகின்றனர் ரிசர்வ் வங்கி . ஆகஸ்ட் மாதத்தில் புதிய நோட்டுகளை வெளியிட திட்டமிட்டனர் .


2016 ல் பணமதிப்பு குறைப்பால் பெறப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டுகள் 6.3 பில்லியன் , அவற்றை விட அதிகமாக 3.7 பில்லியன் அதாவது 7.4 லட்சம் கோடி மதிப்பிற்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக RBI தெரிவித்துள்ளது . புதிய 200 ரூபாய் நோட்டுகள்  அச்சடிக்கும் முதல் பகுதி ஜூன் மாதத்திலே ஆரம்பித்து விட்டார்கள் . எனவே நாட்டில் சில்லறை மாற்றத்திற்கு பிரச்சனைகள் ஏற்படாது என்று கூறியுள்ளனர் .


2000 நோட்டுகளை தடை செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் அச்சம் கொள்ள தேவை இல்லை . புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிக்காக நிறுத்தி உள்ளனர் . எனவே, தவறான செய்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம் மக்களே ..

சுருக்கமாக

சில்லறை தட்டுப்பாடை போக்க புதிய 200  ரூபாய் நோட்டுகள் வருகின்றன ....

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க