YouTurn

1947-ல் நேதாஜியின் படத்துடன் இந்திய ரூபாய் நோட்டு வெளியானதா ?

1947-ல் நேதாஜியின் படத்துடன் இந்திய ரூபாய் நோட்டு வெளியானதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

தேச துரோகிகளால் மறைக்கப்பட்ட வரலாறு நாம் அறிவோம். 1947ம் ஆண்டு இந்திய ரூபாய் நோட்டு நேதாஜி படத்துடன், அதிகம் பகிருங்கள்

விரிவான விளக்கம்

1947-ம் ஆண்டு வெளியான இந்தியா ரூபாய் நோட்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி அவர்களின் உருவப்படம் இடம்பெற்று இருந்ததாக 10 ரூபாய் மதிப்பு கொண்ட நோட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.



Archive link  

நேதாஜி  உருவம் கொண்ட ரூபாய் நோட்டு பல ஆண்டுகளாவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் 1944-ம் ஆண்டு தற்போதைய மியான்மர்(பர்மா) ரங்கூன்(தற்போது யங்கூன்) நகரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஆசாத் ஹிந்த் வங்கி என்ற வங்கியை தொடங்கியுள்ளார். உலகெங்கிலும் இருந்த இந்தியர்கள் அளிக்கும் நன்கொடையை கையாளுவதற்கு இந்த வங்கி உருவாகியது.



மேலும் படிக்க : நேதாஜி உருவம் பொறித்த 1 லட்சம் மதிப்புடைய நோட்டு உண்மையா?

இதற்கு முன்பாக, ஆசாத் ஹிந்த் வங்கி சார்பாக வெளியிடப்பட்ட நேதாஜியின் உருவம் பொறிக்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் நோட்டு குறித்து நாம் விரிவான கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். இந்த வங்கி சார்பில் வெளியான ரூபாய் 1000, 100, 10 என மதிப்புகள் கொண்ட நோட்டுகளின் புகைப்படங்கள் இணையத்தில் உள்ளன.



2018-ம் ஆண்டு டெலிகிராம்இந்தியா செய்தியில், " நேதாஜியின் பிறப்பிடமான ஒடிசாவின் கட்டாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் ஆசாத் ஹிந்த் வங்கி சார்பாக வெளியிட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இருப்பதாக " வெளியாகி இருக்கிறது.

2016-ல் எகனாமிக் டைம்ஸ் செய்தியில், " 1944ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் பர்மாவில் நிறுவப்பட்ட ஆசாத் ஹிந்த் வங்கி வெளியிட்ட பணத்தின் மூலம் கடன்களை திருப்பி செலுத்த அனுமதி கோரி கடன் வாங்கியவர்கள் பலர் நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாக இரு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால்,  ரிசர்வ் வங்கி இதுபோன்ற ஒரு நிறுவனம் குறித்த எந்த பதிவும் இல்லை என்றும், எனவே அந்த பணத்தை சட்டப்பூர்வ டெண்டராக அங்கீகரிக்க முடியாது என்றும் கூறியதாக " இடம்பெற்று இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், நேதாஜி அவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டு சுந்திர போராட்ட காலத்தில் நேதாஜி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஆசாத் ஹிந்த் வங்கி உடையது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் நேதாஜி உருவம் இடம்பெற்ற நோட்டுகள் அசாத் ஹிந்த் வங்கியால் வெளியிடப்பட்டவையே.

அவை சுதந்திர இந்தியாவில் வெளியிடப்பட்டது அல்ல. அதேபோல், பிரிட்டிஷ் அரசாங்கமோ அல்லது சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசாங்கமோ அந்த பணத்தை அங்கீகரிக்கவில்லை என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க