YouTurn

நேரு, அம்பேத்கர் பங்கேற்ற சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்தின் புகைப்படமா ?

நேரு, அம்பேத்கர் பங்கேற்ற சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்தின் புகைப்படமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

1947 சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் நிகழ்ச்சி !

விரிவான விளக்கம்

" சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் ஒருங்கிணைத்த சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்தில் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் மற்றும் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்ட நிகழ்வு " என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ? 

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 1948 ஜூன் மாதம் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ராஜகோபாலச்சாரியார் பதவி ஏற்றதற்கு சர்தார் வல்லபாய் படேல் அளித்த விருந்தில் நேரு, அம்பேத்கர், மௌலானா ஆசாத் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டதாக " அலாமி புகைப்பட விற்பனை தளத்தில் இதே புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.



zoroastrians.net எனும் இணையதளத்தில் வெளியான புகைப்படங்களின் தொகுப்பில், சர்தார் படேல் அளித்த விருந்தில் நேருவின் அமைச்சர்கள் கலந்து கொண்டு உணவு அருந்திய போது மற்றொரு கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.



முடிவு : 

நம் தேடலில், நேரு, அம்பேத்கர் கலந்து கொண்ட சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் நிகழ்ச்சி எனப் பரவும் புகைப்படம் தவறானது. 1948ல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக ராஜகோபாலச்சாரியார் பதவி ஏற்றதற்கு சர்தார் வல்லபாய் படேல் அளித்த விருந்தில் நேருவின் அமைச்சர்கள் கலந்து கொண்ட புகைப்படம் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க