YouTurn

17 வயது பெண்ணை விழுங்கிய பாம்பு: பீதியில் மக்கள்

17 வயது பெண்ணை விழுங்கிய பாம்பு: பீதியில் மக்கள்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆகஸ்ட் 25, 2007 ஆம் ஆண்டில் ஹைதராபாத் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகைய கொடூர சம்பவத்திற்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், பங்களாதேஷை சேர்ந்த ஹர்கட்-உல்-ஜிஹாத்-ஐ-இஸ்லாமி என்ற இயக்கத்தை சந்தேகிப்பதாக ஊடகங்களில்...

பரவிய செய்தி

திருப்பூரில் நேற்று 5 மணி அளவில் நடந்த பரிதாபம். 17 வயது பெண்ணை பாம்பு விழுங்கிய சம்பவத்தால் பீதியில் மக்கள்.

விரிவான விளக்கம்

ஆகஸ்ட் 25, 2007 ஆம் ஆண்டில் ஹைதராபாத் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகைய கொடூர சம்பவத்திற்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், பங்களாதேஷை சேர்ந்த ஹர்கட்-உல்-ஜிஹாத்-ஐ-இஸ்லாமி என்ற இயக்கத்தை சந்தேகிப்பதாக ஊடகங்களில் வெளியாகின. குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த சரளா என்ற பொறியியல் மாணவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த மகளின் உடலைக் கண்டு பெற்றோர்கள் வேதனையுடன் அழும் கட்சி தான் இப்புகைப்படங்கள்.


எனினும், இப்படங்கள் இன்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.. வேறு சில கதைகளுடன்.!


திருப்பூரில் ஓர் ராட்சத பாம்பு இரையை விழுங்கிய நிலையில் பிடிபட்டுள்ளதாகவும், அந்த பாம்பானது 17 வயது பெண்ணை முழுங்கியதாகவும் கூறி தற்போது ஓர் செய்தி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் இருப்பதாக கூறுகின்றனர்.



அனகோண்டா போன்ற ராட்சத பாம்பு ஒன்று இரையை விழுங்கிய நிலையில் வாகனம் ஒன்றில் வைத்திருப்பது போன்ற படங்களானது தொடர்ந்து பல ஆண்டுகளாக ஃபேஸ் புக், வாட்ஸ் அஃப் போன்றவற்றில் வைரலாகி வருவதை அனைவரும் பார்த்திருப்போம். அப்பாம்பானது குடிப்போதையில் இருந்த மனிதனை விழுங்கி விட்டு ஜீரணிக்க இயலாத நிலையில் மயக்கத்தில் இருக்கும் போது பிடிப்பட்டதாகவும் பல இணைய தளங்களில் கூறப்படுகிறது.


உண்மை என்னவென்றால், “ராட்சத பாம்பானது மனிதனை விழுங்கவில்லை. நகரத்தின் தெரு பகுதியில் பிடிபட்டு, பின்னர் வாகனத்தில் ஏற்றி அப்பகுதியை விட்டு அகற்றப்பட்டது. அதன் வயிற்றினுள் பன்றியோ அல்லது ஆடாகவோ  இருக்கலாம் என்று கூறப்படுகிறது”..




உலகம் முழுவதும் பரவிய இந்த பாம்பின் படத்துடன் பல்வேறு கதைகளை தொடர்புப்படுத்தி பரப்பியுள்ளனர். அவற்றில் ஒன்று தான் திருப்பூரைச் சேர்ந்த பெண்ணை விழுங்கியதாகக் கூறியது. மேலும், இதே பெண்னின் படத்தை வைத்து கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் ஓர் வதந்தியை பரப்பி பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.

சுருக்கமாக

2007-ல் ஹைதராபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த சரளா என்ற பெண்ணின் உடலை பாம்பு விழுங்கியதாக கூறி வதந்தியைப் பரப்பியுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க