YouTurn

வயதான குழந்தை பிறந்துள்ளது, உலகின் அழிவு ஆரம்பமா ?

வயதான குழந்தை பிறந்துள்ளது, உலகின் அழிவு ஆரம்பமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலக அழிவின் ஆரம்பத்தை குறிக்கும் நிகழ்வாக வயதான தோற்றத்துடன் ஓர் குழந்தை இந்தியாவின் வட மாநிலத்தில் பிறந்துள்ளது. அந்த குழந்தையின் இரத்த மாதிரி சோதனையில் 105 வயது என்று கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, சித்தர்கள் கூறியது போல் வயதான குழந்தை பிறந்ததை கண்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்றுக் கூறி சமூக...

பரவிய செய்தி

உலகின் அழிவு ஆரம்பமா? மக்கள் பதற்றம். உலகின் இறுதி நாளின் அடையாளமாக வயதான குழந்தை வட இந்தியாவில் பிறந்துள்ளது. சித்தர்கள் கூறியது போல் வயதான ஏழைக் குழந்தைப் பிறந்துள்ளது. குழந்தையின் இரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் அதன் வயது 105 என்று தெரியவந்துள்ளது.

விரிவான விளக்கம்

உலக அழிவின் ஆரம்பத்தை குறிக்கும் நிகழ்வாக வயதான தோற்றத்துடன் ஓர் குழந்தை இந்தியாவின் வட மாநிலத்தில் பிறந்துள்ளது. அந்த குழந்தையின் இரத்த மாதிரி சோதனையில் 105 வயது என்று கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, சித்தர்கள் கூறியது போல் வயதான குழந்தை பிறந்ததை கண்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்றுக் கூறி சமூக வலைதளங்களில் குழந்தையின் படங்கள் பரவி வருகிறது.


ஜூலை 2015 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த எட்டு மாத கர்ப்பிணியான மம்தா தோடே என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை 800 கிராம் எடையுடன் மட்டுமே உள்ளது என்றும், குழந்தைக்கு சில மருத்துவ சோதனைகளை செய்யவிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


குழந்தையின் தந்தையான அஜய் தோடே மற்றும் மம்தா தோடேவும் சில மணி நேரங்களுக்கு பிறகு குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு பிறந்த குழந்தை "wrinkly" என்ற விசித்திரமான தோல் நோயால் வயதான தோற்றத்துடன் பிறந்து உள்ளது. குழந்தையின் பெற்றோர் இருவருமே 25 வயதுடையவர்கள், அவர்களுக்கு பயல் என்று இன்னொரு குழந்தையும் உள்ளது. ஆனால், தற்போது பிறந்த குழந்தை அரிதான நோயுடன் பிறந்ததை எண்ணி வருத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தை பிறந்து இரண்டு வார காலத்தில் அக்குழந்தையை பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர்.


பிறந்த குழந்தைக்கு தாய் பால் அற்ற நிலையில் ஆட்டின் பாலை கொடுத்து அக்குழந்தையின் தாத்தா திலிப் தோடே பராமரித்துவந்துள்ளார். தனது பேத்திக்கு ஏற்பட்ட நிலையை கண்டு வருந்தி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மும்பையில் உள்ள wadia private hospital  குழந்தையின் மருத்துவ செலவிற்கு 5 லட்சம் அளிப்பதாக கூறியுள்ளனர்.


மேலும், குழந்தைக்கு ஏற்பட்ட நோயினை குணப்படுத்தும் நோக்கத்தில் பல மருத்துவ முறைகளை கையாள இருப்பதாகவும், குணமாக்கும் வரை குழந்தை மருத்துவமனையிலே இருக்கலாம் என்று அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியுள்ளார்.


தோல் நோயுடன் பிறந்த குழந்தையின் படத்தை வைத்து உலகம் அழியப் போகிறது என்று சிலர் வதந்தியைப் பரப்பியுள்ளனர் என்பதை நாம் இதிலிருந்து அறிய முடிகிறது,

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க