YouTurn

10 ரூபாய் காசு செல்லா காசா ?

10 ரூபாய் காசு செல்லா காசா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாட்டில் 1000 , 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லாது என்ற பரவிய செய்தியால் பல இடங்களில் 10 ரூபாய் வாங்கப்படாமல் இருந்தது . மேலும் போலியான நாணயம் , செல்லாத நாணயம் என்று எழுதிய தாள்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டன . அத்தியாவசிய விற்பனை பொருள்கள் வாங்கும் இடம் ...

பரவிய செய்தி

1000 , 500 ரூபாய் நோட்டுகள் செல்லாததை தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லாது . எனவே 1௦ ரூபாய் நாணயங்களை யாரும் வாங்கவேண்டாம் .

விரிவான விளக்கம்

நாட்டில் 1000 , 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லாது என்ற பரவிய செய்தியால் பல இடங்களில் 10 ரூபாய் வாங்கப்படாமல் இருந்தது . மேலும் போலியான நாணயம் , செல்லாத நாணயம் என்று எழுதிய தாள்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டன .


அத்தியாவசிய விற்பனை பொருள்கள் வாங்கும் இடம் , பெட்ரோல் பங்குகள் , சந்தைகள் போன்றவை மட்டும் அல்லாமல் அரசு போக்குவரத்து வாகனங்களில் கூட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தனர் . இவ்வாறு தவறான செய்தியால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர் . ஒருசிலர் தங்களிடம் உள்ள நாணயங்களை வங்கி கணக்குகளில் செலுத்த தொடங்கினர் .


10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுத்தது உண்மை என்றாலும் அதற்கான காரணத்தை எவரும் புரிந்துக் கொள்ளவில்லை . ஒருசில சிறு வங்கிகள் தங்களிடம் அதிகப்படியான நாணயங்கள் வைக்க போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் பைகளில் நிரப்பிக் கொண்டு வரும் நாணயங்களை வாங்க மறுத்தனர் .


குறிப்பாக நாட்டில் 1000 , 500 ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் போதுமான பாதுகாப்பான இடவசதி இல்லை என்பதால் வாங்க மறுத்துள்ளனர் . இதனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று தவறாக புரிந்துக் கொண்டு அதிவேகமாக செய்திகள் பரவியது .


மேலும் 2011 ற்கு பிறகு வந்த நாணயங்களில் ரூபாய் குறியீட்டை அறிமுகம் செய்தனர் . எனவே பல நாணயங்களில் வேறுபாடுகள் காணப்பட்டதால் போலியான நாணயங்கள் என்று தவறாக புரிந்துக் கொண்டனர் . இதுபோன்ற தவறான தகவல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது .

சுருக்கமாக

வங்கிகளில் பழைய 1000 , 500 ரூபாய் நோட்டுகள் வைக்கவே இடம் இல்லாததால் 10 ரூபாய் வாங்க மறுத்தனர். இதே வதந்தியாக பரவியது .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க