
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆகஸ்ட் 2 , 2007 ஆண்டில் ஈரானின் முக்கிய நீதிபதியை கொன்றதற்காக டெக்ரான் பகுதியின் சதுக்கத்தில் இருவர் தூக்கிலிடப்பட்டனர் . ஈரானின் தலைநகரில் , 2002 முதல் நடைமுறையில் உள்ள மக்களின் முன் தூக்கிலிடப்படும் பொது மரணதண்டனை வழங்கப்பட்டது . மத்திய டெக்ரானில் நீதிபதி ஹாசன் மொக்தாடாஸ் படுகொலை செய்த மஜீத்...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஆகஸ்ட் 2 , 2007 ஆண்டில் ஈரானின் முக்கிய நீதிபதியை கொன்றதற்காக டெக்ரான் பகுதியின் சதுக்கத்தில் இருவர் தூக்கிலிடப்பட்டனர் . ஈரானின் தலைநகரில் , 2002 முதல் நடைமுறையில் உள்ள மக்களின் முன் தூக்கிலிடப்படும் பொது மரணதண்டனை வழங்கப்பட்டது . மத்திய டெக்ரானில் நீதிபதி ஹாசன் மொக்தாடாஸ் படுகொலை செய்த மஜீத் மற்றும் அவரது மருமகனான ஹொசைன் காவோசியர் ஆகியோருக்கு மக்களின் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது . அப்பொழுது பலர் கடவுள் இருக்கிறார் என்று கூறினர் , பலர் மொபைல் போன்களில் படம் பிடித்தனர் , சிலர் சிரித்தனர் . மஜீத் இறப்பதற்கு முன் தன் மருமகனை பார்த்து சிரித்துள்ளார் .
இந்த மரணதண்டனைக்கு மனித உரிமை ஆணையம் ஈரானை விமர்சித்து உள்ளனர் . மேலும் சீனாவை விட ஈரானில் அதிகப்படியான மரணதண்டனைகள் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர் . பொது மேடையில் தூக்கிலிடப்படும் முன் மஜீத் சிரித்த படங்கள் இணையத்தில் வேகமாக பரவின . ஆனால் வேறு சில கதைகளோடு இன்றளவும் வைரலாகி வருகிறது .
அல்ஜிரியவை சேர்ந்த ஹம்சா பெண்டெலட்ஜ் என்ற ஹேக்கர் அமெரிக்காவின் பல வங்கிகளை ஹேக்கிங் செய்து 400 மில்லியன்டாலர்களை திருடி பல நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு உதவியுள்ளார் . ட்ரோஜன் ஹார்சில் இருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி spyeye என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளனர் . இதை பயன்படுத்தி அமெரிக்காவின் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பல மில்லியன் டாலர்கள் திருடியுள்ளார் . இவர் 2013 ல் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார் .
அல்ஜீரியாவில் உள்ள tizi ouzou சிறையில் 15 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருகிறார் . இதையறியாமல் பலர் மஜீத் சிரிப்புடன் இருந்த படத்தை ஹம்சா பெண்டெலட்ஜ் என்று தவறாக புரிந்து கொண்டு பல வதந்திகளை பரப்பி வருகின்றனர் . சிலர் இதை அறியாமல் உண்மை என்று நினைத்து இந்த படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.