YouTurn

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியுமா ?

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியுமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சீனப்பெருஞ்சுவர் மனிதனால் 21,219 கி.மீ தொலைவிற்கு கட்டப்பட்ட ஓர் சிறந்த கட்டமைப்பு ஆகும் . இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை . இதை விண்வெளியில் இருந்து பார்க்க இயலும் என்பது அவர்களின் நம்பிக்கை . ஆனால் அது உண்மை அல்ல , விண்வெளியில் இருந்து நம்மால் சீனப்பெருஞ்சுவரை காண இயலாது . விண்வெளி...

பரவிய செய்தி

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் நம் கண்களுக்கு நன்றாக தெரியும். மேலும் அதன் வடிவம் ஒரு டிராகன் போன்று காட்சியளிக்கும்.

விரிவான விளக்கம்

    சீனப்பெருஞ்சுவர் மனிதனால் 21,219 கி.மீ தொலைவிற்கு கட்டப்பட்ட ஓர் சிறந்த கட்டமைப்பு ஆகும் . இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை . இதை விண்வெளியில் இருந்து பார்க்க இயலும் என்பது அவர்களின் நம்பிக்கை .


ஆனால் அது உண்மை அல்ல , விண்வெளியில் இருந்து நம்மால் சீனப்பெருஞ்சுவரை காண இயலாது . விண்வெளி மையங்களில் இருந்து தெளிவாக தெரிவதில்லை என்று விண்வெளி வீரர்கள் கூறியுள்ளனர் . கனேடிய விண்வெளி வீரர் கிறிஸ் 2013 ல் ஐந்து மாதங்கள் விண்வெளியில் கழித்தார் . அதன் பின் அவர் சீனப்பெருஞ்சுவர் பற்றி கூறுகையில் சுற்றுப்  பாதையில் பார்க்கக்கூடியது அல்ல மற்றும் இயற்கை மாற்றங்கள் , நிறங்கள் காணப்படுகின்றன என்றுள்ளார் .


சீனாவின் முதல் விண்வெளி வீரர் யாங் லிவி 2003 ஆண்டு விண்வெளிக்கு சென்றார் . வரலாற்று சிறப்புமிக்க சீனப்பெருஞ்சுவரை விண்வெளியில் இருந்து பார்க்க இயலவில்லை என்றுள்ளார் . நாம் படித்து வந்த புத்தகங்களில் உள்ள வார்த்தைகளை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


சீனப்பெருஞ்சுவர் கம்பீரமானது ஆனால் அதை பார்க்க இயலாது . 2004 ஆண்டு லென்சை பயன்படுத்தி சீனப்பெருஞ்சுவரை அமெரிக்க விண்வெளி வீரர் லிராய் சாவோ எடுத்துக்கொண்டதாக நாசா உறுதிப்படுத்தி உள்ளது . மேலும் 180mm ஜிம் லென்ஸ் உடன் எடுத்த பெருஞ்சுவர் படத்தை இணையத்தில் காணலாம் .


விண்வெளியில் இருந்து பெருஞ்சுவரை பார்க்க முடியாம என்ற கேள்விக்கு பருவநிலை மாற்றம் , வடிவம் , அமைப்பு , உபயோகிக்கும் கேமரா இவற்றை பொறுத்தே பதில் அமையும் என்றுள்ளனர் விண்வெளி வீரர்கள் . ஆனால் ரேடார் பதிவுகளின் மூலம் கிடைக்கும் புகைப்படத்தில் பார்க்க இயலும் என்று நிரூபித்துள்ளனர் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க