YouTurn

வானத்தில் இருந்த தேவதை லண்டனில் விழுந்தார்களா ?

வானத்தில் இருந்த தேவதை லண்டனில் விழுந்தார்களா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வானில் உள்ள தேவதை லண்டன் பெருநகரத்தில் விழுந்துள்ளார். ஆகையால், உலகம் அழிவை நோக்கி நகர்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம் சமூக வலைதளங்களில் இப்படங்கள் வைரலாகின. தேவதைகள் பற்றியவை அனைத்தும் கற்பனையே , நிஜ வாழ்கையில் அப்படியென்று எதுவும் இல்லை . அப்படி என்றால் இந்த படத்தில் இருப்பது என்னவென்று...

பரவிய செய்தி

நாம் கற்பனையில் மட்டுமே கேட்டு வந்த தேவதை லண்டன் பெருநகரத்தில் வானத்தில் இருந்து விழுந்துள்ளார் . உலகம் அழிவை நோக்கி நகர்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம் .

விரிவான விளக்கம்

வானில் உள்ள தேவதை லண்டன் பெருநகரத்தில் விழுந்துள்ளார். ஆகையால், உலகம் அழிவை நோக்கி நகர்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம் சமூக வலைதளங்களில் இப்படங்கள் வைரலாகின. தேவதைகள் பற்றியவை அனைத்தும் கற்பனையே , நிஜ வாழ்கையில் அப்படியென்று எதுவும் இல்லை . அப்படி என்றால் இந்த படத்தில் இருப்பது என்னவென்று கேட்கின்றீர்களா , இது ஒரு கலை வடிவம் ஆகும் .


ஆம், புதுமையான மற்றும் தத்துருவமான சிற்பம் என்று கூட கூறலாம் . பெய்ஜிங் கலைஞர்கள் ஆன சன் யுவான் , பெங் யு இவர்களால் 2௦௦8 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கலை வடிவம் . இதற்கு தேவதை என்று பெயர் சூட்டி உள்ளனர் . பலவகையான பொருள்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த கலை பொருள் ஒரு உயர்ந்த யதார்த்தமான சிற்பம் ஆகும் .




இந்த சிற்பம் கற்பனை மற்றும் புராண பாடங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது . இதன் முழுவிவரத்தை அவர்கள் தங்கள் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்


இதை தவறாக புரிந்து கொண்டு உலகம் அழியப்போகின்றது என்றெல்லாம் கூட வதந்திகளை பரப்பி உள்ளனர் . இதை வடிவமைத்தவர்களை பாராட்டித்தான் ஆகவேண்டும் . இதனால் எத்தனை பேர்கள் முட்டளாகியுள்ளனர் .


இதன் வடிவமைப்பு பற்றி படிப்படியான முழுவிவரம் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது .

சுருக்கமாக

ஓர் தத்துருவமான சிற்பத்தை தேவதை என்று கதையை உருவாக்கியுள்ளனர் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க