YouTurn

வாடிக்கையாளர்களிடம் ரூ 1,771 கோடியை அபராதமாக வசூலித்த எஸ்.பி.ஐ.

வாடிக்கையாளர்களிடம் ரூ 1,771 கோடியை அபராதமாக வசூலித்த எஸ்.பி.ஐ.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

“ ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ” வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் இருப்புத்தொகையாக குறிப்பிட்ட தொகையை நிர்வகிக்க வேண்டும். மெட்ரோ நகர்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் 5000 ரூபாயும், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் 3000 ரூபாயையும் இருப்புத்தொகையாக ஒவ்வொரு மாதத்திலும் குறையாமல்...

பரவிய செய்தி

வங்கியின் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையினை வைத்திருக்கவில்லை என்றால் அபராதம் விதித்து வருகிறது எஸ்.பி.ஐ வங்கி. இந்நிலையில், தனது காலாண்டு வருவாயை விட அதிகமாக ரூ.1,771 கோடியை அபராதத்தின் மூலம் வசூலித்துள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.

விரிவான விளக்கம்

“ ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ” வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் இருப்புத்தொகையாக குறிப்பிட்ட தொகையை நிர்வகிக்க வேண்டும். மெட்ரோ நகர்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் 5000 ரூபாயும், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் 3000 ரூபாயையும் இருப்புத்தொகையாக ஒவ்வொரு மாதத்திலும் குறையாமல் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ அறிவித்திருந்தது.

இந்நிலையில், " 2017 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டும் வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்வகிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ 1,771 கோடியை அபராதத்தின் மூலம் வசூலித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி. இத்தொகையானது எஸ்.பி.ஐ வங்கியின் காலாண்டு வருவாயை விட அதிகம். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதத்தில் எஸ்.பி.ஐ பெற்ற காலாண்டு நிகர வருவாயானது ரூ 1,581.55 கோடி மட்டுமே. மேலும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு வருவாயை ஒப்பிடும் போது நிகர வருவாயாக பெற்ற ரூ 3,586 கோடியில் இது பாதியாகும் ".



எஸ்.பி.ஐ வங்கியில் சுமார் 42 கோடிக்கும் அதிகமானோர் சேமிப்பு கணக்கை வைத்துள்ளனர். இதில் 13 கோடி அடிப்படை சேமிப்பு கணக்குகள் மற்றும் பிரதமர் மோடியின் “ பிரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா ” கணக்குகள் ஆகும். இவ்விரண்டிற்கும் இருப்புத்தொகையை நிர்வகிக்கும் நிர்பந்தம் இல்லை.

எஸ்.பி.ஐ வங்கியின் குறைந்தபட்ச இருப்புத்தொகையின் விதிமுறைப்படி, மெட்ரோ மற்றும் புறநகர் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் இருப்புத்தொகையை நிர்வகிக்கவில்லை என்றால் அபராதமாக ரூ.30 முதல் ரூ.50 வரை செலுத்த வேண்டும். சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ரூ.20 முதல் ரூ.40 வரை அபராதமாக செலுத்த வேண்டும். எனினும், 2016-2017 நிதியாண்டு வரை குறைந்தபட்ச இருப்புத்தொகை தொடர்பாக எந்தவொரு அபராதத் தொகையும் எஸ்.பி.ஐ வங்கி வசூலிக்கவில்லை.



எஸ்.பி.ஐ வங்கி போன்று மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்வகிக்கவில்லை என்பதால் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மட்டும் ரூ.97.37 கோடியையும், கனரா வங்கி ரூ.62.16 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளனர். " 2017 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டும் குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்வகிக்கவில்லை என்று அனைத்து வங்கிகளால் ரூபாய் 2320.96 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ".

சுருக்கமாக

எஸ்.பி.ஐ வங்கி, 2017 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டும் வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை நிர்வகிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ 1,771 கோடியை அபராதத்தின் மூலம் வசூலித்துள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க