YouTurn

வள்ளுவரின் மனைவி வாசுகியின் புகைப்படமா ?

வள்ளுவரின் மனைவி வாசுகியின் புகைப்படமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலகபொதுமறை இயற்றிய அய்யன் வள்ளவர் ஓவியமே எங்கும் கிடைக்கவில்லை இதில் அவரது துணைவியார் படம் உங்களுக்கு கிடைத்து விட்டதா . வள்ளுவர் மனைவி வாசுகியின் அரிதானப் படம் என்று இப்படங்கள் சமூக வலைதளத்தில் காணப்படுகின்றன. இதைப் பார்த்தாலே தெரிந்து விடும் , இப்படங்கள் போலியானவை என்று. சிலர் வேண்டுமென்றே...

பரவிய செய்தி

திருவள்ளுவர் மனைவியின் மிகவும் பழமையான படம் கிடைத்துள்ளது .

விரிவான விளக்கம்

உலகபொதுமறை இயற்றிய அய்யன் வள்ளவர் ஓவியமே எங்கும் கிடைக்கவில்லை இதில் அவரது துணைவியார் படம் உங்களுக்கு கிடைத்து விட்டதா . வள்ளுவர் மனைவி வாசுகியின் அரிதானப் படம் என்று இப்படங்கள் சமூக வலைதளத்தில் காணப்படுகின்றன. இதைப் பார்த்தாலே தெரிந்து விடும் , இப்படங்கள் போலியானவை என்று. சிலர் வேண்டுமென்றே விளையாட்டுக்காக செய்துள்ளனர்.


இந்த புகைப்படம் 19 மற்றும் 20 நூற்றாண்டின் இந்தியாவில் உள்ள பெண்கள் என்ற தலைப்பில் வெளியான புகைப்படங்களில் ஒன்று . அந்த நூற்றாண்டின் தெற்கு ஆசியாவில் வாழ்ந்த பலதரப்பட்ட பெண்களின் வாழ்க்கைமுறை , தோற்றம் போன்றவற்றை அறிந்து கொள்ள ஏதுவாக புகைப்படங்கள் உள்ளடக்கிய தொகுப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் .




இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் காணலாம் . அதில் ஒரு படத்தை எடுத்து வள்ளுவரின் மனைவி என்று கூறி வதந்தியை பரப்பி உள்ளனர் .


இணையத்தில் உண்மையைவிட பொய்யான செய்திகளே அதிகமாக கூறப்படுகின்றன . இந்த புகைப்படம் முகபுத்தகம் (facebook) ல் அதிகம் பேசப்பட வேண்டும் என்பதற்காக போடப்பட்ட தவறான செய்தியாகும் .

சுருக்கமாக

இடுப்பில் குடமும் , கையில் கயிறும் இருந்தால் திருவள்ளுவர் மனைவி ஆகிவிடுவார்களா நண்பர்களே .....

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க