YouTurn

லைக் , ஷேர் செய்தால் செல்போன் ஸ்க்ரீனில் பாம்பு ஓடுமா ?

லைக் , ஷேர் செய்தால் செல்போன் ஸ்க்ரீனில் பாம்பு ஓடுமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இன்று பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்படும் செய்தி இதுதான் . உங்கள் செல்போனில் இதுபோன்று பாம்பு ஓடவேண்டும் என்றால் , இந்த படத்தை லைக் செய்து , ஷேர் செய்து , கமெண்ட்டில் snake run என்று டைப் செய்தால் உங்கள் செல்போன் ஸ்க்ரீனில் பாம்பு ஓடுவதை பார்க்கலாம் . இன்றும் நம் இளைஞர்கள்...

பரவிய செய்தி

இந்த படத்தை லைக் செய்து , ஷேர் செய்து , கமெண்ட்டில் snake run என்று டைப் செய்தால் உங்கள் செல்போன் ஸ்க்ரீனில் இதுபோன்று பாம்பு ஓடும் அதிசியம் . முயற்சி செய்து பாருங்கள் .

விரிவான விளக்கம்

 இன்று பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்படும் செய்தி இதுதான் . உங்கள் செல்போனில் இதுபோன்று பாம்பு ஓடவேண்டும் என்றால் , இந்த படத்தை லைக் செய்து , ஷேர் செய்து , கமெண்ட்டில் snake run என்று டைப் செய்தால் உங்கள் செல்போன் ஸ்க்ரீனில் பாம்பு ஓடுவதை பார்க்கலாம் .


இன்றும் நம் இளைஞர்கள் வெகுளித்தனமாக உள்ளனர் என்பதுக்கு இது போன்ற செயலை செய்து நிரூபிக்கின்றன. ஒரு படத்தை ஷேர் செய்வதால் எவ்வாறு இது போன்று நடக்கும் சொல்லுங்கள் பார்போம் .


அப்படி என்றால் பாம்பு எப்படி ஓடுகிறது என்று சிலர் கேட்கத்தான் செய்வார்கள் . இது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  செயலி (app) ஆகும் . இதை போல் பல வகையான செயலிகளை உருவாக்கி பயன்பாட்டிற்கு களமிறக்கி உள்ளனர் .


பாம்பு ஓடுவது , குரங்கு தாவுவது , பூனை ஒளிந்து கொள்வது போன்று பல வகையானவை அடங்கிய செயலி உள்ளது . இது புரியாமல் சிறுபிள்ளை தனமாக ஷேர் , லைக் , கமெண்ட் செய்து கொண்டு இருகின்றார்கள் .


இது போன்ற பல தவறான பதிவுகளை பேஸ்புக்கில் பார்க்கலாம் . உதாரணத்திற்கு கமெண்ட்டில் ஒன்று என்று டைப் செய்துவிட்டு படத்தை பாருங்கள் ஒரு உருவம் தெரியும் , இந்த படத்தை லைக் செய்து , ஷேர் செய்யுங்கள் உங்கள் இன்பாக்ஸ்க்கு அந்தப்படம் தானாக வரும் , இந்த கடவுள் படத்தை ஷேர் செய்தால் நல்ல நடக்கும் , இந்த படத்தை 10 நபர்களுக்கு அனுப்பினால் உங்களுக்கு பணம் வரும் , இலவச நெட் கிடைக்கும் . இது போன்ற பல செய்திகளை நம்பி எதையும் ஷேர் செய்யாதிர்கள் .

சுருக்கமாக

செயலிக்கும் (app ) , வதந்திக்கும் வித்தியாசம் கூடவா தெரியாது .
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க