YouTurn

ரெட்மி நோட் 4 போன் ஷோவ்ரூமில் வெடித்ததா ?

ரெட்மி நோட் 4 போன் ஷோவ்ரூமில் வெடித்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சியோமி ரெட்மி நோட் 4 என்ற புதிய வகையை சேர்ந்த செல்போன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்புகளை கொண்டுள்ளதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது . இந்நிலையில் ஷோவ்ரூம் ஒன்றில் ரெட்மி நோட் 4 வெடித்ததாக கூறி சமூக வலைதளங்களில் ஓர் செய்தி வேகமாக பரவி வருகின்றது . சியோமி நிறுவனத்தின் இந்தியாவின் தலைவர் மானு...

பரவிய செய்தி

சியோமி ரெட்மி நோட் 4 செல்போன் ஷோவ்ரூமில் தீ பற்றி எரிந்தது ...

விரிவான விளக்கம்

சியோமி ரெட்மி நோட் 4 என்ற புதிய வகையை சேர்ந்த செல்போன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்புகளை கொண்டுள்ளதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது . இந்நிலையில் ஷோவ்ரூம் ஒன்றில் ரெட்மி நோட் 4 வெடித்ததாக கூறி சமூக வலைதளங்களில் ஓர் செய்தி வேகமாக பரவி வருகின்றது .


சியோமி நிறுவனத்தின் இந்தியாவின் தலைவர் மானு ஜெயின் பெங்களூர் ரெட்மி செல்போன் வெடித்ததாக கூறி பரவி வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் . பெங்களூரில் உள்ள பூர்விகா கடைக்கு வந்த வாடிக்கையாளர் செல்போனில் இருந்த சிம் கார்டை விற்பனையாளர் மாற்றும் பொழுது ரெட்மி செல்போன் தீ பற்றியது என்று கூறி தவறான செய்திகளை பரவுகின்றன . செல்போன் வெடித்ததாக கூறும் பூர்விகா கடையில் எந்த ஒரு வீடியோ ஆதாரமும் இல்லை என்றுள்ளார் .


மேலும் , அவர் இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகள் என்றும் , இதில் ஒன்று விசாரணை செய்து நிறுவனத்தால் தீர்க்கப்பட்டது என்று கூறினார் . ஜூலை 17 ம் தேதி ஒரு வாடிக்கையாளர்  சியோமி ரெட்மி நோட் 4 குறை என்று கூறிக் கொண்டுவந்துள்ளார் . அந்த செல்போன் வீட்டிலையே சேதமடைந்தது என்று தெரிந்த பிறகும் எச்சரிக்கை செய்த பிறகு எடுத்துகொண்டதாகவும் , முழுமையான தொழில்நுட்ப விசாரணையில் வாடிக்கையாளர் பயன்படுத்திய மூன்றாம் தரப்பு சார்ஜரால் சேதமடைந்தது என்று கண்டறிந்துள்ளார்கள் .


போனில் உடல் ரீதியான பாதிப்புகளும் எற்பட்டுள்ளது . வாடிக்கையாளரால் தூண்டப்பட்ட சேதம் என்றாலும் ஜூலை 24 ம் தேதி புதிய சியோமி ரெட்மி நோட் 4 செல்போன் மாற்றித் தரப்பட்டது என்று ஜெயின் கூறியுள்ளார் .


தவறான செய்தியாக இருந்தாலும் செல்போன்கள் வெடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கையில் தான் உள்ளது . பாதுகாப்பு மிகமுக்கியமானது என்று கருதி செல்போன்களுக்கு ஏற்ற தகுந்த சாதனங்களை பயன்படுத்துங்கள்  ..

சுருக்கமாக

ரெட்மி போன்கள் வெடிக்கவில்லை. எனினும், தவறான சார்ஜர்களை உபயோகிக்க வேண்டாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க