YouTurn

ரான்சம்வேர் வைரஸை பரவாமல் தடுத்தவர் கைது.

ரான்சம்வேர் வைரஸை பரவாமல் தடுத்தவர் கைது.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

சில மாதங்களுக்கு முன்பு உலகையே அச்சுறுத்தியது தான் வான்னாக்ரை என்ற ரான்சம்வேர் தாக்குதல் . இது கணினிகளைத் தாக்கி தீங்கு ஏற்படுத்தும் ஒருவகையான மால்வேர் ஆகும் . ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்திய வரை மொத்தம் 150 நாடுகளை ரான்சம்வேர் தாக்கியது . இதுவரை நடந்த மால்வேர் தாக்குதலில் ரான்சம்வேர்...

பரவிய செய்தி

வான்னாக்ரை ரான்சம்வேர் வைரஸை பரவாமல் தடுத்த மார்கஸ் ஹட்சின்ஸ் என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் .

விரிவான விளக்கம்

சில மாதங்களுக்கு முன்பு உலகையே அச்சுறுத்தியது தான் வான்னாக்ரை என்ற ரான்சம்வேர் தாக்குதல் . இது கணினிகளைத் தாக்கி தீங்கு ஏற்படுத்தும் ஒருவகையான மால்வேர் ஆகும் . ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்திய வரை மொத்தம் 150 நாடுகளை ரான்சம்வேர் தாக்கியது .


இதுவரை நடந்த மால்வேர் தாக்குதலில் ரான்சம்வேர் தாக்குதல் தான் மோசமானது என்று கூறியுள்ளனர் . இமெயில் மூலமாக பரவிய இந்த வைரஸ் கணினியின் தகவல்களை என்க்ரிப்ட் செய்து விடும் . தகவல்களை திரும்ப பெற வேண்டும் என்றால் அதைப் பரப்பிய ஹேக்கர்களுக்கு பிட்காயின் மூலமாக பணம் செலுத்த வேண்டும் .




இப்படி நடந்து கொண்டு இருக்கையில் இந்த வான்னாக்ரை ரான்சம்வேர் தாக்குதலை தடுக்க மார்கஸ் ஹட்சின்ஸ் என்பவர் உதவி செய்துள்ளார் . 23  வயதான மார்கஸ் ஹட்சின்ஸ் இங்கிலாந்தில் மால்வேர்டெக் என்ற இணையத்தளத்தை நடத்தி வருகின்றார் . இவரால் தான் வான்னாக்ரை ரான்சம்வேர் மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டது . அந்த மால்வேரில் 23 கேரக்டர்களை கொண்ட இணையதள முகவரி அக்டிவேட் செய்யப்பட்டால் ரான்சம்வேர் மேலும் பரவாமல் இருக்கும் என்ற கோட் ஒன்று உள்ளது என்பதை கண்டறிந்துள்ளார் . எனவே அந்த தளத்தை தனது பெயரில் பதிவு செய்து அக்டிவேட் செய்தார் . இதனால் ரான்சம்வேர் மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டது . உலகம் முழுவதும் உள்ள பலர்  இவருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர் .


இப்படி இருக்கையில் , மார்கஸ் அமெரிக்காவில் நடந்த சைபர் கருத்தரங்கத்திற்கு சென்று திரும்புகையில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார் . க்ரோனாஸ் என்ற வங்கியை தாக்கும் மால்வேரை 2014 ல் தயாரித்து ஒருவரிடம் விற்றுள்ளார் . அவர் கள்ள சந்தையில் வேறொருவரிடம் விற்றுள்ளார் . இந்த மால்வேரால் 2014 ல்  வங்கி கணக்குகளில் இருந்து பணங்கள் திருடப்பட்டிருக்கிறது . எனவே FBI ஆல் மார்கஸ் கைது செய்யப்பட்டுள்ளார் .

சுருக்கமாக

இவர் 2014 ல் உருவாக்கிய மால்வேரால் வங்கி கணக்குகளில் இருந்து பணங்கள் திருடப்பட்டிருக்கிறது . எனவே மார்கஸ்  FBI ஆல் கைதாகினார் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க